- Home
- Cinema
- Jailer 2 Day 2 Box Office : பாக்ஸ் ஆபிஸில் டபுள் செஞ்சுரி அடித்த ஜெயிலர் 2... இரண்டாம் நாள் வசூல் இத்தனை கோடியா?
Jailer 2 Day 2 Box Office : பாக்ஸ் ஆபிஸில் டபுள் செஞ்சுரி அடித்த ஜெயிலர் 2... இரண்டாம் நாள் வசூல் இத்தனை கோடியா?
Jailer 2 Movie Box Office : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் சக்கைப் போடு போட்டு வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் 2ம் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

Jailer 2 Day 2 Box Office Collection
தமிழ் சினிமாவில் இருந்த இந்த ஆண்டு வெளியான மிகப்பெரிய பான் இந்தியா படம் தான் ஜெயிலர் 2. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், வித்யா பாலன், சூரஜ், எஸ்.ஜே.சூர்யா, மிர்ணா, ரம்யா கிருஷ்ணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெரிப் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 15ந் தேதி ரிலீஸ் ஆனது.
ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் ஜெயிலர் 2
ஜெயிலர் 2 திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே பாசிடிவ் விமர்சனங்களை பெற்றதால், அப்படத்தின் வசூலும் ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கியது. மறுபுறம் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, வட மாநிலங்களிலும் ஜெயிலர் 2 படத்திற்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. ஜெயிலர் முதல் பாகத்தைக் காட்டிலும் ஜெயிலர் 2-ம் பாகத்தில் காமெடி மற்றும் மாஸ் காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளதால், இப்படம் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்துள்ளது. ஜெயிலர் 2 திரைப்படம் நேற்றும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி இருக்கிறது.
பாக்ஸ் ஆபிஸை அதிரவிடும் ரஜினி
திரும்பிய பக்கமெல்லாம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி வருவதால் ஜெயிலர் 2 படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி ரிலீஸ் ஆன முதல் நாளில் உலகளவில் ரூ.125 கோடி வசூலித்திருந்த இப்படம், இரண்டாம் நாளிலும் அதன் வேட்டையை தொடர்ந்துள்ளது. இத்தனைக்கு நேற்று விடுமுறை நாள் இல்லாத போதிலும் ஜெயிலர் 2 படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்துள்ளனர் என்பது அதன் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்டை பார்க்கும் போதே தெரிகிறது. இதனால் படக்குழு செம குஷியில் உள்ளது.
ஜெயிலர் 2 இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு?
ஜெயிலர் 2 திரைப்படம் இரண்டாம் நாளில் உலகளவில் ரூ.84 கோடி வசூலித்திருக்கிறது. இதில் இந்தியாவில் இருந்து மட்டும் 44 கோடி வசூல் செய்துள்ளது. இதுதவிர ஓவர்சீஸில் நேற்று மட்டும் ரூ.40 கோடி வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.209.10 கோடி வசூலித்துள்ளது ஜெயிலர் 2. அதில் இந்தியாவில் 112.10 கோடியும், வெளிநாடுகளில் 97 கோடியும் வசூலித்துள்ளது ஜெயிலர் 2. அடுத்தடுத்து நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் இப்படம் 1000 கோடி வசூல் அள்ளவும் வாய்ப்புள்ளது.
ரெக்கார்டு மேக்கராகும் ஜெயிலர் 2
ஜெயிலர் 2 திரைப்படம் நேற்று தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25.25 கோடி வசூலித்திருக்கிறது. அடுத்தபடியாக தெலுங்கு பதிப்பு ரூ.7.25 கோடியும், இந்தி பதிப்பு ரூ.2.75 கோடியும், கன்னட பதிப்பு ரூ.35 லட்சமும் வசூல் செய்துள்ளது. ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையை நிச்சயம் படைக்கும் என கோலிவுட் தரப்பில் பேச்சு அடிபடுகிறது. ஜெயிலர் 2 வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் தான் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

