MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Actor Dhanush :ஃபார்மில் இருந்த அசுரனை பாதாளத்தில் தள்ளிவிட்ட 2 கார்த்திக் - போச்சே.. போச்சேனு புலம்பும் தனுஷ்

Actor Dhanush :ஃபார்மில் இருந்த அசுரனை பாதாளத்தில் தள்ளிவிட்ட 2 கார்த்திக் - போச்சே.. போச்சேனு புலம்பும் தனுஷ்

Actor Dhanush : மாறன் படத்தை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள், 2 காத்திக்குகளை நம்பி தனுஷ் தனது இமேஜை டேமேஜ் செய்துகொண்டதாக விமர்சித்து வருகின்றனர். 

2 Min read
Author : Ganesh A
Published : Mar 13 2022, 12:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

3 தேசிய விருதுகளை வென்றவர்

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானபோது பல்வேறு விமர்சனங்களை சந்தித்த தனுஷ், தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிக் கொண்டு தலைசிறந்த நடிகராக உயர்ந்து சாதித்துக் காட்டினார். இவரது நடிப்புத் திறமைக்கு கிடைத்த சான்று தான் தேசிய விருதுகள். ஒருமுறை அல்ல இதுவரை மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார் தனுஷ்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

வெற்றிமாறனால் உயர்ந்த மார்க்கெட்

தமிழ் சினிமாவில் தனுஷின் இமேஜை பன்மடங்கு உயர்த்தியது ஆடுகளம், வட சென்னை, அசுரன் போன்ற படங்கள் தான். இந்த படங்களையெல்லாம் இயக்கியது வெற்றிமாறன். கடந்த 10 ஆண்டுகளில் வெற்றிமாறன் உடன் அதிகம் பணியாற்றி இருந்தார் தனுஷ். மளமளவென உயர்ந்த தனுஷின் மார்க்கெட் தற்போது வேகமாக சரியத் தொடங்கி உள்ளது.

35

அடுத்தடுத்து 2 ஃபிளாப்

இதற்கெல்லாம் காரணம் அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜகமே தந்திரம், மாறன் ஆகிய இரண்டு படங்கள் தான். அசுரன், கர்ணன் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த தனுஷுக்கு இந்த இரண்டு படங்களும் செம்ம அடியை கொடுத்துள்ளன. இவை இரண்டுமே ஓடிடி-யில் வெளியான படங்கள். 

45

காலை வாரிவிட்ட 2 கார்த்திக்குகள்

இதில் ஜகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இப்படத்தில் தாதாவாக நடித்திருந்தார் தனுஷ். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி இருந்த இப்படம் கடந்தாண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி கடும் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து தனுஷ் நடிப்பில் அண்மையில் ஓடிடி-யில் வெளியான மாறன் படமும் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார்.

55

தனுஷ் செம்ம அப்செட்

இப்படத்தை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 2 கார்த்திக்குகளை நம்பி தனுஷ் தனது இமேஜை டேமேஜ் செய்துகொண்டதாக விமர்சித்து வருகின்றனர். தொடர்ந்து 2 படங்கள் தோல்வியை சந்தித்ததால், தனுஷின் மார்க்கெட்டும் சரிவை சந்தித்துள்ளதாம். இதனால் அவர் கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இரு படங்களின் தோல்வியால் அவர் அடுத்ததாக நடித்து வரும் படங்களின் பிசினஸும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

இதையும் படியுங்கள்... வலிமை பாக்குறப்போ இது நம்ம படமாச்சேனு தோணுச்சு... அப்படியே காப்பி அடிச்சு வச்சிருக்காங்க - மெட்ரோ தயாரிப்பாளர்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Travel Movies : வீட்டிலிருந்தே உலகத்தை சுற்றிப் பார்க்க வைக்கும் 5 படங்கள்!
Recommended image2
Korean Movies : மனதை லேசாக்கும் 7 சூப்பர் ஹிட் கொரியன் திரைப்படங்கள்!
Recommended image3
OTT வேண்டாம்... மிரள வைக்கும் ட்விஸ்ட்களுடன் கூடிய இந்த தமிழ் வெப் சீரிஸை யூடியூப்பில் இலவசமா பார்க்கலாம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved