பிக் பாஸ் வரலாற்றில் ஜாக்குலின் படைத்த மிகப்பெரிய சாதனை!
Bigg boss Jacquline : பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இதுவரை 7 சீசன்களில் எந்த ஒரு போட்டியாளரும் செய்திராத சாதனையை 8-வது சீசனில் ஜாக்குலின் படைத்துள்ளார்.
Jacquline
பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடந்துமுடிந்த 7 சீசன்களையும் உலக நாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். ஆனால் தற்போது சினிமாவில் பிசியானதால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனை தன்னால் தொகுத்து வழங்க முடியாது என அறிவித்து அதில் இருந்து விலகினார் கமல்ஹாசன். அவருக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
Bigg Boss Jacquline
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 3 வாரங்கள் மட்டுமே எஞ்சி உள்ளதால், ஆட்டம் சூடுபிடித்துள்ளது. தற்போது அருண் பிரசாத், முத்துக்குமரன், ரயான், ராணவ், விஜே விஷால், தீபக், மஞ்சரி, செளந்தர்யா, பவித்ரா, ஜாக்குலின் ஆகிய 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இவர்களில் ஒருவர் தான் பிக்பாஸ் டைட்டிலை தட்டிதூக்க உள்ளனர். அதில் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் வீட்டின் சண்டைக் கோழி அன்ஷிதாவுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம்! அதுவும் இவ்வளவா?
Bigg Boss Jacquline Record
இதில் மொத்தம் 10 டாஸ்க்குகள் நடத்தப்படும். அதன் இறுதியில் யார் அதிகமான புள்ளிகளை எடுத்துள்ளார்களோ அவர்களே நேரடியாக பைனலுக்கு முன்னேறுவார்கள். இந்த டாஸ்க் தொடங்குவதற்கு முன் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தாங்கள் வெளியேற்ற விரும்பும் இரண்டு போட்டியாளர்களின் பெயர்களை சொல்லினர். அதில் முத்துக்குமரன், செளந்தர்யா தவிர்த்து எஞ்சியுள்ள 8 பேரும் நாமினேட் ஆகி உள்ளனர்.
Jacquline Create Record in Bigg Boss
இதன்மூலம் ஜாக்குலின் புது சாதனையை படைத்திருக்கிறார். தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக முறை நாமினேட் ஆன போட்டியாளராக பாவனி ரெட்டி இருந்து வந்தார். அவர் தொடர்ச்சியாக 12 வாரங்கள் நாமினேட் ஆகி இருந்தார். ஆனால் ஜாக்குலின் தற்போது தொடர்ச்சியாக 13 வாரங்கள் நாமினேட் ஆகியதன் மூலம் பாவனி ரெட்டியின் சாதனையை முறியடித்து உள்ளார்.
Most Nominated Contestant in Bigg Boss History
அதேபோல் மற்ற மொழிகளை பொறுத்தவரை இந்தி பிக் பாஸில் அதன் 14-வது சீசனில் கலந்துகொண்ட ரூபினா திலக் என்பவர் தான் அதிக முறை நாமினேட் ஆன போட்டியாளர் என்கிற சாதனையை படைத்திருக்கிறார். அவர் ஒட்டுமொத்தமாக 15 வாரம் நாமினேட் ஆகி இருந்தார். அந்த சாதனையையும் ஜாக்குலின் இன்னும் இரு வாரங்களில் முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... இது பிக் பாஸ் வீடா இல்ல சினிமா தியேட்டரா? அமரனை தொடர்ந்து ஒளிபரப்பப்பட்ட புதுப்படம்