விரைவில் முடிவுக்கு வருகிறது ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்..!! இது தான் காரணமா?
சுமார் 400 எபிசோடுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்க உள்ளதால் நிறைவடைய உள்ளதாம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகியுள்ள தேன்மொழி பி.ஏ. ஊராட்சி மன்றத் தலைவர் என்கிற சீரியலும் ஒன்று.
thenmozhi
இந்த சீரியலில் ஜாக்குலினுக்கு ஜோடியாக, சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான சித்தார்த் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் மூலம் ஒரு தொகுப்பாளினியாக மட்டுமே பார்க்கப்பட்ட ஜாகுலின் சின்னத்திரையில், தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டார்.
இந்நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது, சுமார் 400 எபிசோடுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்க உள்ளதால் நிறைவடைய உள்ளதாம்.
Bigg boss tamil
ரசிகர்களின் ஆதரவோடு மிகவும் கலகலப்பாக ஒட்டி வந்த இந்த சீரியல் நிறுத்தப்படுகிறது என்கிற தகவல், இந்த சீரியலுக்கான ரசிகர்கள் வட்டாரத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.