- Home
- Cinema
- காரில் அடிக்க வந்தனர்; அசிங்கப்படுத்திய காதலன்! பிக்பாஸ் வீட்டில் ஜாக்குலின் பகிர்ந்த கண்ணீர் கதை!
காரில் அடிக்க வந்தனர்; அசிங்கப்படுத்திய காதலன்! பிக்பாஸ் வீட்டில் ஜாக்குலின் பகிர்ந்த கண்ணீர் கதை!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ள ஜாக்குலின், தன்னுடைய காதல் வாழ்க்கை மற்றும் அப்பாவை பற்றி பல விஷயங்களை பிக்பாஸ் போட்டியாளர்கள் முன் உடைத்து பேசியுள்ளார்.

Bigg Boss tamil Season 8
பிக்பாஸில் தற்போது கதை சொல்லும் டாஸ்க் துவங்கி உள்ளது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களை முதல் முறையாக வெளிப்படையாக கூறி வருகின்றனர். அந்த வகையில் ஜாக்குலின், பேசும் போது சின்ன வயதில் இருந்தே தான் பட்ட கஷ்டம், அநீதிக்கு குரல் கொடுக்க முடியாமல் இன்று வரை குமுறிக்கொண்டிருக்கும் விஷயம், அதனால் வந்த பிரச்சனை, மற்றும் காதலனால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை என பல விஷயங்களை பேசியுள்ளார்.
ஜாக்குலினை பேசும் போது, "தன்னுடைய அம்மா தான் எங்களை கஷ்டப்பட்டு வளர்த்தார். ஏனென்றால் எங்களுக்கு அப்பா இல்லை. இதுவரை நான் என்னுடைய அப்பாவின் முகத்தை ஒருமுறை கூட பார்த்ததே இல்லை. அப்பாவை நினைக்கும் போதெல்லாம் எனக்கு கயிறு தான் நினைவுக்கு வரும். அவர் நாங்கள் சின்ன பிள்ளைகளாக இருக்கும் போதே... எங்கள தவிக்க விட்டு விட்டு சென்று விட்டார் என உருக்கமாக பேசியிருந்தார்.
Jacquline About Family
ஆனால் என்னுடைய அம்மா, என் தந்தை விட்டு சென்றதால் சோர்வடையாமல் எங்களை மிகவும் கஷ்டப்பட்டு, வளர்த்தார். ஒரு வேலை சாப்பாட்டுக்கு கூட நாங்கள் கஷ்டப்பட்ட காலங்கள் உண்டு. பல நாட்கள் ஒரு பாக்கெட் பார்லேஜி பிஸ்கெட் சாப்பிட்டு என்னுடைய பசியை போக்கி இருக்கிறேன். தங்குவதற்கு கூட இடம் இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறோம். அந்த சமயத்தில் எங்களுக்கு என ஒரு இடம் வேண்டும் என, கடன் உடன் பட்டு ஒரு இடத்தை வாங்கி அதில் ஒரு வீட்டையும் கட்டினோம். எங்கள் வீட்டில் முதலில் ஒரு பொருள் கூட இருக்காது.
நான் சம்பாதிக்க துவங்கிய பின்னர் தான் ஒவ்வொரு பொருட்களாக வாங்க துவங்கினேன். நான் வாங்கிய பொருட்களுக்கான EMI சுமேரு கொண்டுருக்கிறது. நிறைய பிரச்னைகளுடைய தான் நானும் இருக்கிறேன். என்னுடைய பிரச்சனைகள் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்து கொண்டு வருகிறேன். அதேபோல் எனக்கான வாய்ப்பை, நான் கைப்பற்ற அதிகம் கஷ்டப்பட்டிருக்கிறேன்.
Jacquline shared School life Love
சிறுவயதில் என்னுடைய தோழிக்கு ஒரு தவறான விஷயம் நடந்தது. அப்போதைக்கு அதை என்னால் தட்டி கேட்க முடியாத நிலையில் இருந்தேன். அந்த வருத்தம் தற்போது வரை என் மனதில் உள்ளது. அந்த சமயத்தில் என்னுடைய அம்மா எதையும் என்னை தைரியமாக வெளியே பேச விட மாட்டார். என்னை பார்த்து பார்த்து வளர்த்தார். தோழி விஷயத்தில் நடந்ததை நான் வெளியே சொல்லி விடுவேனோ? என சிலர் என்னை காரில் வந்து அடிக்கப் பார்த்தனர். அதிலிருந்து நான் எப்படியோ தப்பிவிட்டேன். இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கலாம் என என்னுடைய அம்மாவிடம் சொன்னபோது, அவங்க அதையும் தடுத்துட்டாங்க. இப்படி ஒரு சில பேச வேண்டிய இடங்களில் நான் குரல் கொடுக்கவில்லை.
Bad Experience
என்னுடைய காதல் வாழ்க்கையும் மிகவும் மோசமான அனுபவத்தையே எனக்கு கொடுத்தது. நான் பள்ளியில் படிக்கும் போது ஒருவரை காதலித்தேன். அந்த காதலில் நான் உண்மையாக இருந்தாலும், அந்த காதல் எனக்கு ஆபத்தானதாகவே இருந்தது. அவர் என்னை பார்க்கும் ஒவ்வொரு முறையும், உன் குரல் சரி இல்லை, நீ அழகாக இல்லை என சொல்லி சொல்லி எனக்குள் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. இது என்னுடைய வாழ்க்கையில் பல இடங்களில் பிரதிபதிக்க துவங்கியது. 'நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ் நிகழ்கியில் செலக்ட் ஆன பிறகு தான் நான் என்னை நம்ப துவங்கினேன் என்றார்.
Jacquline Sentimental speech
இதை தொடர்ந்து பேசிய ஜாக்குலின், நான் இப்பவும் அழுத்தமாக சொல்ல வேண்டிய ஒரு விஷயம் என்றால், சிங்கிள் மதராக இருப்பவர்களால், குடும்பத்தை மிகவும் நன்றாக கொண்டு செல்ல முடியும். குழந்தைகளை நன்றாக வளர்க்க முடியும். கண்டிப்பா அவர்களாலும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க முடியும். அதே போல் அவர்களுடைய குழந்தைகளும் வாழ்க்கையில் ஏதாவது சாதிப்பார்கள். என்னை போல் யாராவது கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால், அதற்க்கு கவலைப்படாதீர்கள். திடீரென ஒரு நாள் உங்கள் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை பார்ப்பீர்கள். சீக்கிரமாக உங்களுடைய வாழ்க்கையும் மாறும் என மிகவும் உருக்கமாக பேசி உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.