- Home
- Cinema
- BiggBoss Tamil 5: பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது இந்த நடிகரா? அப்போ செம்ம மாஸ் தான்!
BiggBoss Tamil 5: பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது இந்த நடிகரா? அப்போ செம்ம மாஸ் தான்!
பிரபல நடிகரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான கமல்ஹாசன் (Kamalhassan) தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு பதில் அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை (Biggboss tamil 5) யார் தொகுத்து வழங்குவார் என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த லிஸ்டில் பிரபல நடிகரின் பெயர் அடிபட்டு வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் ஆரம்பமான நாள் முதல் தற்போது வரை இந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யம் குறையாமல் தொகுத்து வழங்கி வருபவர் உலகநாயகன் கமல் ஹாசன்.
நிகழ்ச்சியில் சுவாரசியம் குறைத்தால்... கூட இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் இரண்டு நாட்கள் டி.ஆர்.பி வேறு லெவலுக்கு எகிறி விடும்.
மேலும் மக்கள் போட்டியாளர்களிடம் கேட்க விரும்பும் கேள்விகளை மக்களின் சார்பாக கேட்டு அவர்களுக்கு கேள்விகளாலேயே சாட்டையடி கொடுத்து கெத்து காட்டுவார். அதே நேரம் எந்த இடத்தில் போட்டியாளரை விட்டுக்கொடுக்க கொடுக்க வேண்டும், இழுத்து பிடிக்க வேண்டும் என்பதையும் நன்கு தெரிந்தவர்.
அந்த வகையில் தற்போது கலந்து கொண்டுள்ள பிக்பாஸ் போட்டியாளர்கள் எப்படி என்பதை கணித்து அவர்களுக்கு ஏற்ற போல் பதில் கொடுத்து வந்தார் என்பது நாம் அறிந்ததே.
இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய நிலையில், லேசான இருமல் இருந்ததால், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இது குறித்து டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதை அடுத்து கமல்ஹாசன் சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கமல்ஹாசன் சுவாச பாதையில் தொற்று பாதிப்பு மற்றும் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே... அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்பதில் மிகப்பெரிய குழப்பம் நீடித்து வந்த நிலையில், பிரபல நடிகையும் ஏற்கனவே தமிழில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியுள்ள ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் இந்த லிஸ்டில் தற்போது விஜய் சேதுபதியின் பெயர் அடிபட்டு வருகிறது. இவர் ஏற்கனவே தொகுத்து வழங்கி வந்த, 'மாஸ்டர் செஃப் ' நிகழ்ச்சி ஓரிரு வாரத்திற்கு முன் முடிவடைந்த நிலையில், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போது வரை அதிகார பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், விரைவில் யார் இந்த வார தொகுப்பாளர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.