காந்தாரா 2-வில் நடிக்கிறாரா ரஜினிகாந்த்..? இயக்குனர் ரிஷப் ஷெட்டி கொடுத்த அல்டிமேட் ஹிண்ட்
காந்தாரா 2 படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறாரா என்கிற கேள்விக்கு ரிஷப் ஷெட்டி பதில் அளித்துள்ளார்.
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்தாண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் தான் காந்தாரா. இப்படத்தில் அவரே நாயகனாகவும் நடித்திருந்தார். வெறும் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து அதிரி புதிரியான வெற்றியை பதிவு செய்தது. காந்தாரா படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் ரிஷப் ஷெட்டிக்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான பிரபலங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
குறிப்பாக நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ரிஷப் ஷெட்டியை தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டினார். அப்போது படம் குறித்து அவரிடம் சிலாகித்து பேசிய ரஜினி, ரிஷப் ஷெட்டிக்கு தங்க செயினையும் பரிசாக வழங்கி இருந்தார். காந்தாரா படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் ரிஷப் ஷெட்டி அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக அண்மையில் அறிவித்தார். முதல்பாகத்தை விட பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... அஜித் இல்லேனா என்ன மாமாகுட்டி இருக்காரே... விக்கியின் அடுத்த படத்தில் இணையும் பிளாக்பஸ்டர் நாயகன்..!
காந்தாரா 2 படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருது விழா நடைபெற்றது. இதில் காந்தாரா படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டிக்கும் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் ரிஷப் ஷெட்டியிடம் காந்தாரா 2 திரைப்படம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதில் குறிப்பாக காந்தாரா 2 திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளாரா என்கிற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, பதில் அளிக்க மறுத்துவிட்ட இயக்குனர் ரிஷப் ஷெட்டி, தயாரிப்பு நிறுவனம் தான் படம் பற்றிய விவரங்கள் அனைத்தையும் வெளியிடும் எனக்கூறிவிட்ட நைசாக நழுவிவிட்டார். அவர் எந்த பதிலும் கூறாமல் நழுவியதை பார்த்தால் காந்தாரா 2 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... நீ ஒரு ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சுட்ட... செல்பி எடுத்து கின்னஸ் சாதனை படைத்த நடிகர் அக்ஷய் குமார் - வைரல் வீடியோ