கணவரை விவாகரத்து செய்கிறாரா சமந்தா? சைலண்டாக செயலால் பதிலடி கொடுத்த காதல் தம்பதி..!
நடிகை சமந்தா அவருடைய கணவரை பிரிய உள்ளதாக, ஒரு தகவல் சமூக வலைத்தளத்தை ஒரு தகவல் சுற்றி வருகிறது. இதற்க்கு இருவருமே எந்த ஒரு பதிலும் கூறாத நிலையில், தங்களுடைய செய்கையால் பதிலடி கொடுத்துள்ளனர்.

நடிகை சமந்தா அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவர். இவரின் பவர் ஃபுல் நடிப்பும், திறமையும் தான் இவருக்கு பல ரசிகர்களை உருவாக்கி தந்துள்ளது என்றால் அதனை யாராலும் மறுக்க முடியாது.
சமந்தா ஒரு மாடர்ன் பெண்ணாக இருந்தாலும், தன்னுடைய மாமியார், மாமனார், உறவுகள் என அனுசரித்து குடும்பத்தை நடத்தி வருகிறார் என்று இவரை பார்த்து பொறாமை படுபவர்களும் உண்டு. திருமணத்திற்கு பின் சமந்தா அக்கினேனி என கணவர் குடும்ப பெயரை தனது பெயருடனும் இணைத்து கொண்டார்.
சமூக வலைத்தளத்திலும் இந்த பெயரை சமந்தா பதிவு செய்த நிலையில், திடீரென கணவர் குடும்ப பெயரை சமந்தா நீக்க, கணவரை விட்டு பிரிகிறார் என்றும், விவாகரத்து போவதாகவும் சில வதந்திகள் பரவ துவங்கியது.
இந்த சர்ச்சை குறித்து, கணவன் - மனைவி இருவருமே எந்த ஒரு தகவலையும் வெளியிடாத நிலையில், தங்களுடைய விவாகரத்து வதந்திக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
அதாவது சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் தங்களுக்காக கோவாவில் பெரிய அளவில் ஒரு இடம் வாங்கியுள்ளதாகவும், அந்த இடத்தில் தற்போது Farm House கட்டும் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார்களாம். இவரும் சேர்ந்து இந்த பணியை மேற்கொள்வதால், சமூக வலைத்தளத்தில் சுற்றி வரும் வதந்திக்கு, இருவருமே முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.