MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒரே பாடலில் ஒரு வார்த்தையை 238 முறை பயன்படுத்திய ஏ.ஆர்.ரகுமான் - அது எந்த பாட்டு தெரியுமா?

ஒரே பாடலில் ஒரு வார்த்தையை 238 முறை பயன்படுத்திய ஏ.ஆர்.ரகுமான் - அது எந்த பாட்டு தெரியுமா?

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் புதுப்புது முயற்சிகளை தன் பாடல்களில் பயன்படுவது வழக்கம், அந்த வகையில் ஒரே வார்த்தையை 238 முறை பயன்படுத்தி ஒரு ஹிட் பாடலை கொடுத்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 23 2026, 12:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
AR Rahman Song Secret
Image Credit : X

AR Rahman Song Secret

தமிழ் சினிமாவில் மிகவும் வலிமையான கூட்டணிகளில் ஒன்றாக மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் காம்போவை சொல்லலாம். 1992-ம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையிசை உலகில் காலடி வைத்த ரகுமான், அன்று முதல் இன்று வரை மணிரத்னத்தின் நம்பகமான இசையமைப்பாளராக திகழ்கிறார். குறிப்பிடத்தக்க வகையில், ரோஜாவுக்கு முன்னர் இளையராஜாவோடு மட்டுமே இணைந்து பணியாற்றிய மணிரத்னம், அதற்கு பின்னர் ரகுமானையே தனது பிரதான தேர்வாக வைத்திருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி
Image Credit : X

மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி

தற்போது கூட இவர்கள் கூட்டணியில் ஒரு படம் தயாராகி வருகிறது. அப்படத்தின் அறிவிப்பு வெளிவரும் முன்ன சாய் அபயங்கர் இசையமைக்க இருப்பதாகவும் ரகுமானில் இருந்து சாய் அபயங்கர் பக்கம் மணிரத்னம் சென்றுவிட்டதாக பரவலாக பேச்சு அடிபட்டது. ஆனால் என்றென்றும் என்னுடைய படத்துக்கு ரகுமான் தான் இசையமைப்பார் என்று அறிவிக்கும் விதமாக போஸ்டர் வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மணிரத்னம். அவர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சாய் பல்லவியும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் ஜோடியாக நடிக்கிறார்கள். விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

Related Articles

Related image1
ஏ.ஆர்.ரகுமான் இசைபாடும் சாலை... இந்தியாவின் முதல் மியூசிக் ரோடு எங்கு உள்ளது தெரியுமா?
Related image2
ஏ.ஆர்.ரகுமானை அழவைத்த ‘அந்த’ ஒரு பாடல் பற்றி தெரியுமா? டியூன் வாசிக்கும்போதே கண்ணீர் வந்துச்சாம்...!
34
கடல் பட பாடல் ரகசியம்
Image Credit : our own

கடல் பட பாடல் ரகசியம்

ஏ.ஆர்.ரகுமான் - மணிரத்னம் கூட்டணியில் சில படங்கள் தோல்வியை சந்தித்திருக்கின்றன. அதில் ஒரு படம் தான் கடல். அப்படம் தோல்வியடைந்தாலும் அதில் உள்ள பாடல்கள் அனைத்தும் மாஸ்டர் பீஸ் ஆக உள்ளன. கடல் படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக்கும், நடிகை ராதாவின் மகள் துளசியும் ஜோடியாக நடித்திருந்தனர். அவர்கள் இருவரும் சினிமாவில் அறிமுகமானதும் இப்படத்தின் மூலம் தான். படம் வெற்றி பெறவில்லை என்றாலும், அதில் ரகுமான் இசையில் வந்த பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது உள்ளன.

44
மகுடி சாங் சீக்ரெட்
Image Credit : our own

மகுடி சாங் சீக்ரெட்

நெஞ்சுக்குள்ள, மூங்கில் தோட்டம், அடியே உள்ளிட்ட பாடல்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இதில் மற்றுமொரு சூப்பர் ஹிட் பாடல் இருக்கிறது. அப்பாடல் தான் மகுடி. அப்பாடலில் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கிறது. அது என்னவென்றால், பிரபல பாடகர் ஏடிகே பாடி, வரிகளையும் எழுதிய மகுடி பாடலில் "மகுடி" என்ற ஒரே வார்த்தை மட்டும் 238 முறை இடம்பெற்றிருக்கும். இசையில் ஒரு வார்த்தையை மட்டுமே ஆதாரமாக வைத்து இத்தகையதொரு கவர்ச்சியான பாடலை உருவாக்கியிருப்பது ரகுமானின் மாஸ்டர் கிளாஸ் என்றே சொல்லலாம். அது வெளியாகி பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், அந்த பாடலின் தனித்துவமான வசீகரம் இன்றும் அப்படியே இருக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஏ. ஆர். ரகுமான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jana Nayagan : கருப்பு பட ரெக்கார்டை அடிச்சு துவம்சம் செய்ய வரும் ஜனநாயகன்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Recommended image2
TVK Vijay: 'தளபதியை' இனி அசைக்கவே முடியாது? உச்சம் தொடும் 'முதல்வர் விஜய்' கிராப்... குரு பெயர்ச்சி தரும் மாஸ் திருப்புமுனை!
Recommended image3
Theatre and OTT Releases : பக்ரீத் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Related Stories
Recommended image1
ஏ.ஆர்.ரகுமான் இசைபாடும் சாலை... இந்தியாவின் முதல் மியூசிக் ரோடு எங்கு உள்ளது தெரியுமா?
Recommended image2
ஏ.ஆர்.ரகுமானை அழவைத்த ‘அந்த’ ஒரு பாடல் பற்றி தெரியுமா? டியூன் வாசிக்கும்போதே கண்ணீர் வந்துச்சாம்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved