- Home
- Cinema
- Box Office Kings: முதல் நாளில் 100 கோடி வசூல்.! டாப் 5 நடிகர்களில் விஜய்க்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
Box Office Kings: முதல் நாளில் 100 கோடி வசூல்.! டாப் 5 நடிகர்களில் விஜய்க்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
முதல் நாளிலேயே உலகளவில் 100 கோடி வசூலித்த படங்களைக் கொடுத்த டாப் 5 இந்திய நடிகர்கள் யார் யார்? இந்த லிஸ்ட்ல நம்பர் 1 இடத்துல இருக்குறது யாருனு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

முதல் நாளிலேயே உலகளவில் 100 கோடி வசூல்
சமீபத்தில் வெளியான ராம் சரணின் 'பெட்டி' (Peddi) படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பி வருகிறது. இந்தப் படம் முதல் நாளிலேயே உலகளவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து கணக்கைத் தொடங்கியது. இந்த முதல் நாளில் 100 கோடிக்கும் மேல் வசூலித்த படங்களைக் கொடுத்த டாப் ஹீரோக்கள் யார் என்று இந்த கேலரியில் பார்க்கலாம்.
100 கோடி வசூலித்த நடிகர்கள் லிஸ்ட்டில் தளபதி விஜய்
முதல் நாளில் உலகளவில் 100 கோடி வசூலித்த நடிகர்கள் லிஸ்ட்டில் தளபதி விஜய் இருக்கிறார். இவருடைய 'லியோ' மற்றும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' ஆகிய 2 படங்கள் முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தன.
பாலிவுட் கிங் ஷாருக்கான்
பாலிவுட் கிங் ஷாருக்கானும் இந்த லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளார். இவருடைய 'பதான்' மற்றும் 'ஜவான்' ஆகிய இரண்டு படங்களும் முதல் நாளில் உலகளவில் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தன.
மாஸ் காட்டும் ராம் சரண்
ராம் சரண் சமீபத்தில் வெளியான 'பெட்டி' படத்தால் செம லைம்லைட்டில் இருக்கிறார். இவருடைய 'RRR' மற்றும் 'பெட்டி' ஆகிய இரண்டு படங்களும் முதல் நாளில் உலக பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலுடன் கணக்கைத் தொடங்கின.
சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர்
சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆரும் இந்த லிஸ்ட்டில் இருக்கிறார். இவருடைய 'RRR' மற்றும் 'தேவரா' ஆகிய இரண்டு படங்களும் முதல் நாளில் உலகளவில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தன.
பிரபாஸ் தான் டாப்
முதல் நாளில் உலகளவில் 100 கோடி வசூலித்த நடிகர்கள் லிஸ்ட்டில் பிரபாஸ் தான் டாப்பில் இருக்கிறார். இவருடைய 'பாகுபலி 2', 'சலார்', 'ஆதிபுருஷ்', 'சாஹோ', 'தி ராஜா சாப்' மற்றும் 'கல்கி 2898 ஏடி' என சுமார் 6 படங்கள் 100 கோடிக்கு மேல் ஓப்பனிங் பெற்றுள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

