MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Tamizh Murugan : சினிமாவில் முருகன் சீசன் ஆரம்பம்... தமிழ் முருகன் உள்பட ஒரே நேரத்தில் 3 முருகன் படங்கள் உருவாகுது

Tamizh Murugan : சினிமாவில் முருகன் சீசன் ஆரம்பம்... தமிழ் முருகன் உள்பட ஒரே நேரத்தில் 3 முருகன் படங்கள் உருவாகுது

Murugan Films : திரையுலகில் தற்போது முருகன் சீசன் ஆரம்பமாகி இருக்கிறது. தற்போது ஒரே நேரத்தில் 3 முருகன் படங்கள் உருவாகி வருகின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jul 11 2026, 10:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
3 Murugan Films on the way
Image Credit : X

3 Murugan Films on the way

சினிமாவில் ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. ஒரு ஜானரில் படங்கள் ஹிட் ஆனால் அதே ஜானரையே பின் தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் வெளியாகும். அப்படம் ஒரு சீசனில் பேய் படங்கள் தொடர்ச்சியாக வந்தன. பின்னர் டிரெண்ட் மாறி சாமி படங்கள் அதிகளவில் வெளிவந்தன. அந்த டிரெண்டில் இன்னும் ஒரு படி மேலே போய் தற்போது முருகனை மையமாக வைத்து 3 படங்கள் ஒரே நேரத்தில் உருவாகி வருகின்றன. அதில் இரண்டு படங்கள் தமிழ் சினிமாவிலும், ஒரு படம் தெலுங்கு திரையுலகிலும் உருவாகிறது. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சேயோன்
Image Credit : x/@ikamalhaasan

சேயோன்

முதன்முதலில் அறிவிக்கப்பட்ட முருகன் படம் என்றால் அது சேயோன் தான். சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இப்படத்தை தாய்கிழவி படத்தின் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்குகிறார். விருமாண்டிக்கும் முருகனுக்கும் இடையேயான மோதலை மையமாக வைத்து தான் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது கோலிவுட்டின் காந்தாராவாக இருக்க வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இப்படம் வெளியான பின்னர் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போஸ் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Related Articles

Related image1
விருமாண்டி vs முருகன் மோதல்... கோலிவுட்டின் காந்தாராவாக உருவாகும் சேயோன் - கதை என்ன தெரியுமா?
Related image2
விருமாண்டியாக மாறிய சிவகார்த்திகேயன்... SK-வின் பிறந்தநாள் பரிசாக வந்த சேயோன் கிளிம்ப்ஸ்
34
ஜூனியர் என்.டி.ஆர் - திரிவிக்ரம் படம்
Image Credit : OTHERS

ஜூனியர் என்.டி.ஆர் - திரிவிக்ரம் படம்

முருகனை மையமாக வைத்து உருவாக உள்ள மற்றுமொரு திரைப்படம் இது. இப்படத்தை திரிவிக்ரம் இயக்குகிறார். இதில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர் வெளியானபோதே சர்ச்சை வெடித்தது. ஏனெனில் அதில் முருகன் வட இந்தியாவில் இருந்து வந்தவர் என்பது போல் குறிப்பிட்டு இருந்தார்கள். அதனால் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சீமான் உள்பட பலரும் அந்த போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படம் பான் இந்தியா அளவில் உருவாகிறது. அப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

44
தமிழ் முருகன்
Image Credit : X

தமிழ் முருகன்

முருகனை மையமாக வைத்து உருவாகும் 3வது படம் தமிழ் முருகன். இது அறிவுமதி எழுதிய தமிழ் முருகன் புத்தகத்தை மையமாக வைத்து உருவாக உள்ளது. வெற்றிமாறன் இப்படத்தை இயக்குகிறார். இதில் தனுஷ் முருகனாக நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோ சர்ப்ரைஸாக வெளியிடப்பட்டது. அந்த வீடியோ முழுக்க முழுக்க ஏழி மூலம் உருவாக்கப்பட்டு இருந்தது. அப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தான் அப்படத்தை தயாரிக்க உள்ளது. அறிவுமதி எழுதிய புத்தகத்தின் படி, முருகன் முதலில் ஒரு தமிழ் தலைவன்; காலப்போக்கில் தெய்வமாக வணங்கப்பட்டார். இந்தக் கருத்தை சங்க இலக்கியமும் தமிழ் வரலாறும் அடிப்படையாக வைத்து விளக்கி இருந்தார். அதனை வெற்றிமாறன் எப்படி கையாளப்போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
வெற்றிமாறன்
தனுஷ்
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : மனோஜுக்கு கோயிலில் காத்திருந்த அதிர்ச்சி... மகனின் களவாணித்தனத்தை கண்டுபிடித்தாரா விஜயா?
Recommended image2
Idhayam Murali Review : இதயம் தொட்டதா? இரிடேட் பண்ணியதா? இதயம் முரளி விமர்சனம்
Recommended image3
Velpari Movie : ஷங்கரின் வேள்பாரியில் சூர்யாவா? தனுஷா? யார் ஹீரோ?
Related Stories
Recommended image1
விருமாண்டி vs முருகன் மோதல்... கோலிவுட்டின் காந்தாராவாக உருவாகும் சேயோன் - கதை என்ன தெரியுமா?
Recommended image2
விருமாண்டியாக மாறிய சிவகார்த்திகேயன்... SK-வின் பிறந்தநாள் பரிசாக வந்த சேயோன் கிளிம்ப்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved