ஒத்து வராத விஜய்யை கழட்டி விட்ட பா.ரஞ்சித்..!! சூப்பர் ஹீரோ கதையை கைப்பற்றிய முன்னணி நடிகர் யார் தெரியுமா?
தளபதி விஜய்க்கு, இயக்குனர் பா.ரஞ்சித் கூறிய சூப்பர் ஹீரோ கதையில் வேறு ஒரு முன்னணி ஹீரோ நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு, சர்வதேச அளவில் பாராட்டையும் பெற்றது. இந்த படத்தில் ஹீரோவாக நடித்த ஆர்யா முதல், சிறிய கதாபாத்திரங்களில் நடித்த பிரபலங்கள் வரை அனைவருக்குமே திரையுலகில் இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம்.
இந்த படத்தை தொடர்ந்து, தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படம் ஒன்றையும் இயக்கி வருகிறார்.
இவர் இயக்கத்தில் நடிக்கவே சில நடிகர்கள் போட்டி போடும் நிலையில், சமீபத்தில் தளபதி விஜய்யை சந்தித்து, பா.ரஞ்சித் சூப்பர் ஹீரோ கதை ஒன்றை கூறியதாக தகவல் வெளியானது.
இந்த படத்தில் விஜய் நடிப்பாரா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே இருந்த நிலையில், திடீர் என இந்த படத்தில் மற்றொரு முன்னணி ஹீரோ நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படத்தில் வரும் ஒரு காட்சிக்காக கூட, தன்னுடைய உடலை வருத்தி ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர் சியான் விக்ரம் தான் தற்போது, விஜய்க்கு சொன்ன சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
எப்படியும் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் பீஸ்ட் படத்தை முடித்த பின்னர், வம்சி இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு பின், பா ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், விஜய் ஒத்து வராததால் அவரை பா ரஞ்சித் கழட்டி விட்டுட்டு தான் விக்ரமை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வழக்கமான சூப்பர் ஹீரோ கதை போல் இல்லாமல், இந்த படம் வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது விக்ரம் நடித்து வரும், 'பொன்னியின் செல்வன்', 'மஹான்', மற்றும் 'கோப்ரா' ஆகிய படங்கள் அனைத்துமே இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் , இப்படங்களை முடித்த பின்னர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.