MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாதி பாட்டு வெஸ்டர்ன்.. மீதி பாட்டு போக்.. ரஜினிக்காக புதிய முயற்சி - வாலியை அசர வைத்த இளையராஜா!

பாதி பாட்டு வெஸ்டர்ன்.. மீதி பாட்டு போக்.. ரஜினிக்காக புதிய முயற்சி - வாலியை அசர வைத்த இளையராஜா!

Ilayaraja and Rajinikanth : இளையராஜா மற்றும் ரஜினிகாந்த் காம்பினேஷனில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளியாகியுள்ளது. அதில் ஒரு சிறப்பான பாடல் குறித்து பார்க்கலாம்.

3 Min read
Author : Ansgar R
| Updated : Sep 12 2024, 05:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Music Director Ilayaraja

Music Director Ilayaraja

தமிழ் திரையுலகை பொருத்தவரை என்றென்றும் அழியாத புகழோடு வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு இசையமைப்பாளர் என்றால் அது இளையராஜா மட்டும் தான். இசைஞானி என்கின்ற பட்டத்தோடு இந்த உலகத்தையே தனது இசையால் கட்டிப் போடக்கூடிய திறன் கொண்ட ஒரு மாமேதை. இவருடைய இசையில் நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் சுமார் 6500க்கும் மேற்பட்ட பாடல்கள் இயற்றியவர் அவர். 

தமிழ் சினிமாவை பொறுத்தவரை மோகன் மற்றும் ராமராஜன் போன்ற பல முன்னணி ஹீரோக்களுடைய திரை வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகித்தவர் இளையராஜா. அதிலும் குறிப்பாக வெறும் 4 ஆண்டுகள் மட்டுமே திரையுலகில் பணியாற்றி, இன்றுவரை மாபெரும் புகழோடு வலம் வந்து கொண்டிருக்கும் ராமராஜன், அந்த புகழை அடைய ஒரே ஒரு காரணமாக இருந்தவர் இளையராஜா தான். இதை ராமராஜனே பல மேடைகளில் கூறியுள்ளார்.

நாகேஷ் வாயை கிளறி விட்டு... 10 நிமிடத்தில் கண்ணதாசன் எழுதிய ஹிட் பாடல்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Rajinikanth

Rajinikanth

வெறும் இசையமைப்பு மட்டும் என்று மட்டும் இல்லாமல், தான் இசையமைக்கும் ஒவ்வொரு பாடல்களிலும் ஒரு தனிப்பட்ட நேர்த்தியை கடைப்பிடித்தவர் இளையராஜா. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு, பலரும் வியக்கும் வண்ணம் பல பாடல்களை கொடுத்தவர் இளையராஜா. குறிப்பாக ரஜினியின் தளபதி படத்தில் வரும் எல்லா பாடல்களுமே மெகா ஹிட்டான பாடல்கள் தான். அதுமட்டுமா? படிக்காதவன், அண்ணாமலை, வேலைக்காரன், முள்ளும் மலரும், ஜானி, எஜமான் என்று இந்த வெற்றிக்கூட்டணியில் லிஸ்ட் பெரிது. 

இப்படி சூப்பர் ஸ்டாருக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்த இளையராஜா, ஒரு குறிப்பிட்ட படத்தில் வித்தியாசமான முயற்சி ஒன்றையும் மேற்கொண்டுள்ளார். முழுக்க முழுக்க ரஜினிகாந்திற்காக எடுக்கப்பட்ட முயற்சி அது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல பாடலாசிரியர் வாலியின் வரிகளில் உருவான அந்த பாடல் குறித்து இப்போது பார்க்கலாம்.

34
Mannan movie

Mannan movie

கடந்த 1992ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குஷ்பூ மற்றும் விஜயசாந்தி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "மன்னன்". பட்டி தொட்டி எங்கும் மெகா ஹிட் ஆன திரைப்படம் அது. படையப்பாவிற்கு முன்னதாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இணையாக ஒரு நடிகை ஸ்கோர் செய்த வெகு சில திரைப்படங்களில் அதுவும் ஒன்று. இந்த திரைப்படத்தில் இளையராஜா ஒரு குறிப்பிட்ட பாடலை இசையமைக்கிறார், அந்த பாட்டின் மெட்டை கேட்கும் வாலி அசந்து போய், அதற்கான வரிகளில் இளையராஜாவை புகழ்வது போல எழுதுகிறார்.

அந்த பாடல் தான் "ராஜாதி ராஜா உன் தந்திரங்கள், நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்" என்கின்ற பாடல். சரி, இளையராஜா இசையில் உருவான பல சூப்பர் ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்று தான், இதில் சிறப்பு என்ன இருக்கிறது என்று பார்க்கும்போது, இந்த பாடலில் ஒலிக்கும் முதல் பாதி டியூன் "வெஸ்டர்ன்" ஸ்டைலிலும், இரண்டாவது பாதி டியூன் "போக்" ஸ்டைலிலும் இருக்கும். அதுவரை பெரிய அளவில் யாரும் கையாலாத ஒரு யூகித்தியை ரஜினிக்காக செய்திருப்பார் இளையராஜா. வேண்டுமானால் மீண்டும் ஒருமுறை அந்த பாடலை கேட்டு பாருங்கள் அந்த விஷயம் புரியும்.

44
Coolie Movie

Coolie Movie

இது மட்டுமல்ல இந்த மன்னன் திரைப்படத்தின் மூலம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, முதல் முறையாக பாடகராக திரையுலகுக்கு இளையராஜா அறிமுகம் செய்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எவ்வளவோ மறுத்தும், அந்த பாடலை நீங்கள் தான் கட்டாயம் பாடியே தீர வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மன்னன் திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகம் செய்தார் இளையராஜா. 

"அடிக்குது குளிரு" என்கின்ற பாடலும் மன்னன் திரைப்படத்தில் இடம் பெற்ற மிகச்சிறந்த பாடல்களில் ஒன்று. ரஜினிகாந்தின் இந்த 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் அவருக்கு மெகாஹிட்டான பல படங்களில் இசையமைத்தது இளையராஜா. ஆனால் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி மற்றும் இளையராஜா காம்பினேஷன் உடைந்தது. குறிப்பாக இந்த காப்புரிமை பிரச்சனை வந்ததற்கு பிறகு, ரஜினி மற்றும் இளையராஜா இடையே ஒரு மோதல் போக்கே இருந்து வருகின்றது. 

சிகிச்சைக்கு பணமில்லாததால் கண்முன்னே பறிபோன தந்தையின் உயிர்... கலங்க வைக்கும் வடிவேலுவின் மறுபக்கம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved