தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இளையராஜா பாடல் இந்த தமிழ் பாடலா?
Ilaiyaraaja Song Matarani Mounamidi is Super hit in Telugu : தெலுங்கு சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இளையராஜாவின் பாடல் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
S. P. Balasubrahmanyam, S. Janaki, Ilaiyaraaja, Director Vamsy
இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர் எவரும் இந்த உலகத்தில் இருக்க முடியாது. இசைக்கு இருக்கும் ஒரே ஒரு ராஜா என்றால் அது இசைஞானி இளையாராஜா தான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 1000க்கும் அதிகமான படங்களில் 7000க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
Shenbagamae Shenbagamae, Maataraani Mounamidi
அப்படி தெலுங்கு சினிமாவில் இவர் இசையமைத்த பாடல் மற்றும் படம் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 1987 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான படம் மகரிஷி. இயக்குநர் வம்சி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் மூலமாக நடிகர் ராகவா சினிமாவில் அறிமுகமானார். மேலும், நிஷாந்தி, கிருஷ்ண பகவான், நரசிம்மராவ் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார்.
Raghava, Nishanti, Manja Podi Theikkaiyile Video Song
பணக்கார கர்வம் கொண்ட காலேஜ் மாணவனான ராகவா கல்லூரியில் புரபசர்களை கேலி கிண்டல் செய்வது, மாணவர்களை அடிப்பது என்று ஒரே அராஜகம் செய்வான். அதன் பிறகு நிஷாந்தியான சுஜித்ராவை சந்திக்கிறார். இதையடுத்து நடக்கும் சம்பவங்கள் தான் படத்தோடு கதை. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப் படத்தில் இளையராஜாவின் இசையில் வந்த Maataraani Mounamidi என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலம்.
Ilaiyaraaja, Director Vamsy, Maharshi Movie
பின்னணி பாடகர் எஸ்பி பால்சுப்பிரமணியம் மற்றும் ஜானகி இருவரும் இணைந்து இந்தப் பாடலை பாடியிருந்தனர். ஆனால், இந்தப் பாடல் தான் தமிழ் சினிமாவில் ராமராஜன் நடிப்பில் திரைக்கு வந்த செண்பகமே செண்பகமே என்ற படம். இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த மஞ்சப் பொடி தேய்க்கையிலேயே என்ற பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியம் தனியாக மேல் வாய்ஸ் மட்டும் பாடி அசத்தியிருப்பார்.
Matarani Mounamidi Video Song
ஆனால், தமிழ் ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடித்த படமாக இருந்தாலும், தெலுங்கில் வந்த Maataraani Mounamidi என்ற பாடல் தான் தமிழை விட தெலுங்கு சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது. இளையராஜா தன்னுடைய மொழி படங்களில் காப்பி அடித்து ஹிட் கொடுத்த பாடல்கள் ஏராளம். அதில் இந்த பாடலும் ஒன்று என்று கூட சொல்லலாம்.