- Home
- Cinema
- இளையராஜாவுக்கு தில்ல பாத்தீங்களா! இதெல்லாம் அவர் வீரப்பன் ஏரியாவில் கம்போஸ் செய்த பாடல்களாம்
இளையராஜாவுக்கு தில்ல பாத்தீங்களா! இதெல்லாம் அவர் வீரப்பன் ஏரியாவில் கம்போஸ் செய்த பாடல்களாம்
இசைஞானி இளையராஜா வீரப்பன் ஏரியாவில் கம்போஸ் செய்த பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகி இருக்கின்றன. அது என்ன பாடல்கள் என்பதை பார்க்கலாம்.

Ilaiyaraaja Song Secret
இளையராஜா (Ilaiyaraaja) என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவரின் இசை தான். அந்த அளவுக்கு இசையில் தனது ராஜாங்கத்தை நடத்தி வருகிறார் இசைஞானி. அன்னக்கிளியில் தொடங்கிய அவரது இசைப் பயணம் தற்போது 50 ஆண்டுகளை நெருங்கிவிட்டது. தற்போது அவருக்கு வயது 80ஐ கடந்துவிட்டாலும் இன்றளவும் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். அண்மையில் லண்டனில் தன்னுடைய முதல் சிம்பொனியை அரங்கேற்றி இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார் இளையராஜா.
Ilaiyaraaja
வீரப்பன் ஏரியாவில் இளையராஜா கம்போஸ் செய்த பாடல்கள்
இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இளையராஜா, தன்னுடைய பாடல்கள் உருவான கதையை பகிர்ந்துகொண்டார். அந்த வகையில் தான் வீரப்பன் ஏரியாவில் கம்போஸ் செய்த பாடல்கள் பற்றியும் அதில் பேசி இருந்தார். அதைப்பற்றி பார்க்கலாம். தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன், அவர் தயாரித்த காக்கி சட்டை படத்தின் பாடல் கம்போஸிங்கிற்காக இளையராஜாவை முதுமலைக்கு அழைத்து சென்றாராம். காலையில் கம்போஸிங் தொடங்கிய நிலையில், மதியமே காக்கி சட்டை பட கம்போஸிங்கை முடித்துவிட்டாராம் இளையராஜா.
Isaignani Ilaiyaraaja
இளையராஜா ட்யூனுக்காக உருவான படம்
இதையடுத்து மாலையில் தனக்கு மனதில் தோன்றும் ட்யூன்களையெல்லாம் கம்போஸ் செய்து அதை ஒரு கேசட்டில் பதிவு செய்தாராம் இளையராஜா. மொத்தம் 6 ட்யூன்கள் அவர் ரெக்கார்டு செய்திருந்தாராம். அந்த 6 ட்யூன்களையும் ஒரே ஒரு படத்திற்கு தான் கொடுக்க வேண்டும் என முடிவெடுத்த இளையராஜாவிடம் வந்து பஞ்சு அருணாச்சலம் அந்த கேசட்டை வாங்கி சென்று, அதில் ஒரே ஒரு ட்யூனை மட்டும் தனக்கு தருமாறு கேட்டாராம். தன்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம் கேட்டும் அந்த ட்யூனை தர மறுத்துவிட்டாராம் இளையராஜா.
இதையும் படியுங்கள்... இசைஞானிக்கு சென்னையில் பாராட்டு விழா.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த முதலமைச்சர் ஸ்டாலின்
Ilaiyaraaja Songs
வைதேகி காத்திருந்தாள் பட பாடல் ரகசியம்
அப்படி அவர் வீரப்பன் ஏரியாவில் கம்போஸ் செய்து பொத்தி பொத்தி பாதுகாத்து வைத்திருந்த அந்த ட்யூனுக்காக உருவான திரைப்படம் தான் ‘வைதேகி காத்திருந்தாள்’. விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இந்த படத்தில் இடம்பெற்ற அந்த 6 பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன. இப்பாடல்களுக்காக கதை அமைத்தது வேறுயாருமில்லை இயக்குனர் ஆர்.சுந்தர் ராஜன். இவர் தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் தந்தையாக நடித்து வருகிறார்.
Secret Behind Ilaiyaraaja Songs
யானைகள் விரும்பி கேட்ட இளையராஜா பாடல்
மேலும் இளையராஜா முதுமலை காட்டுப் பகுதிக்கு சென்று கம்போஸ் செய்ததாலோ என்னவோ, வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’ பாடல் யானைக்கு மிக பிடித்த பாடலாக இருந்தது. கேரள எல்லையோரம் அமைந்திருந்த ஒரு தியேட்டரில் இப்படம் திரையிடப்பட்டபோது, இந்த பாடலை கேட்பதற்காகவே யானைக் கூட்டம் தினசரி வந்து சென்றதாம். இதை இசைஞானியே ஒரு பேட்டியில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... இளையராஜா லேடி வாய்ஸில் பாடி பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான பாடல் பற்றி தெரியுமா?