இளையராஜா காதுகளை எட்டிய அதிர்ச்சி செய்தி... அதிருப்தியில் எடுத்த அதிரடி முடிவு...!

First Published Dec 28, 2020, 2:24 PM IST

இந்நிலையில் திடீரென இளையராஜா மன உளைச்சலில் இருப்பதால் இன்று பிரசாத் ஸ்டூடியோ செல்வதை ரத்து செய்வதாக தகவல்கள் வெளியாகின.

சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் பிரசாத் ஸ்டுடியோவில் இருந்த ரெக்கார்டிங் தியேட்டர் ஒன்றை இசைஞானி இளையராஜா பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தார். கடந்த 40 ஆண்டுகளாக அவர் பிரசாத் ஸ்டுடியோ அரங்கை பயன்படுத்தி வருகிறார்.

கடந்த 40 ஆண்டுகளாக அவர் பிரசாத் ஸ்டுடியோ அரங்கை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் இளையராஜாவை அந்த அரங்கை காலி செய்யுமாறு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இதுகுறித்து இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தன்னுடைய பொருட்களை எடுக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணையின் போது பிரசாத் ஸ்டூடியோ சார்பில் இளையராஜாவிற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

பிரசாத் ஸ்டூடியோவுக்கு சொந்தமான நிலத்தை உரிமை கோர கூடாது, ஒரு உதவியாளர், ஒரு இசைக்கலைஞர் மற்றும் வழக்கறிஞர் மட்டுமே உடன் வர வேண்டும் என பல நிபந்தனைகள் கூறப்பட்டது.

பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் கூறப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் ஏற்ற இளையராஜா, வழக்கையும் வாபஸ் பெற்றார்.

இதையடுத்து இன்று இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது அறைக்கு சென்று இசைக்கருவிகள் உள்ளிட்டவற்றை எடுப்பதோடு, தியானம் செய்யவும் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் திடீரென இளையராஜா மன உளைச்சலில் இருப்பதால் இன்று பிரசாத் ஸ்டூடியோ செல்வதை ரத்து செய்வதாக தகவல்கள் வெளியாகின.

இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள இளையராஜாவின் தனி அறை பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ செல்லும் திட்டத்தை கைவிட்டுள்ளார். முடிவுக்கு வந்ததாக எண்ணப்பட்ட பிரசாத் ஸ்டூடியோ விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?