MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நான்கு பேருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் லீக் ஆனது எப்படி? ஜன நாயகன் படக்குழுவில் வெடித்தப் போராட்டம்

நான்கு பேருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் லீக் ஆனது எப்படி? ஜன நாயகன் படக்குழுவில் வெடித்தப் போராட்டம்

Jana Nayagan Full Movie HD Video Leaked Online: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்துள்ள சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 10 2026, 12:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
TVK Vijay   Jana Nayagan Movie
Image Credit : Facebook

TVK Vijay - Jana Nayagan Movie

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜன நாயகன்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்துள்ள சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஒரு திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, இறுதி வடிவம் பெற்ற பின்னரே திரையரங்குகளுக்கு அனுப்பப்படும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Jana Nayagan - ஜன நாயகன்
Image Credit : Getty, KVN Productions

Jana Nayagan - ஜன நாயகன்

ஆனால், நேற்று (ஏப்ரல் 9) இணையத்தில் வெளியான ‘ஜன நாயகன்’ படத்தின் பதிப்பில் ‘எடிட் மார்க்’ (Edit Marks) எனப்படும் படத்தொகுப்பு அடையாளங்கள் இடம் பெற்றிருப்பதுதான் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.திரைப்படத் துறையின் தொழில்நுட்ப முறைப்படி, ஒரு படத்தின் ஆரம்பக்கட்ட எடிட்டிங் பணிகளின் போது மட்டுமே இத்தகைய எடிட் மார்க்குகள் கொண்ட பதிப்புகள் (Raw Cut) பயன்படுத்தப்படும்.

36
Jana Nayagan Full Movie Leaked Online Ja
Image Credit : X

Jana Nayagan Full Movie Leaked Online Ja

இத்தகைய பதிப்புகள் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்படுபவை. குறிப்பாக, படத்தின் இயக்குநர், கதாநாயகன், எடிட்டர் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய இந்த நான்கு முக்கிய நபர்களிடம் அல்லது அவர்களின் நேரடி மேற்பார்வையில் உள்ள எடிட்டிங் ஸ்டுடியோக்களில் மட்டுமே இந்தப் பிரதி இருக்கும். தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கும் பதிப்பு, இந்த நான்கு தரப்பில் ஏதேனும் ஒன்றிலிருந்து தான் கசிந்திருக்க வேண்டும் எனத் திரையுலகினர் உறுதியாகக் கூறுகின்றனர்.

46
Jana Nayagan Movie Leaked Online
Image Credit : X

Jana Nayagan Movie Leaked Online

இதனால் படக்குழுவினர் இடையே தற்போது பெரும் போராட்டமும், ஒருவரையொருவர் சந்தேகப்படும் சூழலும் உருவாகியுள்ளது. தயாரிப்பு தரப்பு இது குறித்து சென்னை சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளது. பொதுவாகப் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும் போது திரையரங்கில் இருந்து படம் திருட்டுத்தனமாகப் பதிவு செய்யப்பட்டு கசிவது வழக்கம். ஆனால், எடிட்டிங் மேசையில் இருக்கும் ஒரு பதிப்பு கசிவது என்பது தயாரிப்பு நிர்வாகத்தின் பாதுகாப்புக் குறைபாட்டையே காட்டுகிறது.

56
Thalapathy Vijay Jana Nayagan Movie Leaked Online
Image Credit : instagram

Thalapathy Vijay Jana Nayagan Movie Leaked Online

தவிர, ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஏற்கனவே அதன் அரசியல் வசனங்கள் மற்றும் தணிக்கை வாரியத்துடனான மோதல் காரணமாகத் தேசிய அளவில் செய்திகளில் இடம்பெற்றிருந்தது. தேர்தல் ஆணையத்தின் நேரடி கண்காணிப்பில் இப்படம் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இந்த திடீர் கசிவு அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்ற கோணத்திலும் தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

66
Jana Nayagan Movie HD video Leaked
Image Credit : X

Jana Nayagan Movie HD video Leaked

பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ள ஒரு பிரம்மாண்ட படம், ரிலீஸிற்கு முன்பே இப்படி கசிந்திருப்பது படத்தின் வசூலை கடுமையாகப் பாதிக்கும் என்பதால், விஜய் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளி யார் என்பதைக் கண்டறிய படக்குழுவினர் எடிட்டிங் ஸ்டுடியோவின் சிசிடிவி காட்சிகள் மற்றும் டிஜிட்டல் தடயங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் சினிமா தயாரிப்பில் டிஜிட்டல் பாதுகாப்பின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜன நாயகன்
தளபதி விஜய்
டிவி.கே. விஜய்
திரைப்படம்
ஜன நாயகன் வெளியீட்டு தேதி
ஜனநாயகன்
 
2nd TEST • PAK vs SL 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
15th T20 • WBBLT20
Result
SS-WSS-W
162/2
ST-WST-W
158
Sydney Sixers Women Won by 9 runs (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rajinikanth : ரஜினிகாந்த் தன் முழு சொத்துக்களையும் தமிழ் மக்களுக்காக எழுதி வைப்பேன் என சொன்னாரா? உண்மை பின்னணி இதோ
Recommended image2
Music: ஒரே ராகத்தில் 2 சூப்பர் ஹிட் பாடல்கள்.! கண்ணதாசன் செய்த மேஜிக்.! இசையமைப்பாளர் யார் தெரியுமா?
Recommended image3
Kajal Aggarwal: '100 அடி கிரேன் விழும் போது ஒரு மர்ம கை என்னைக் காப்பாற்றியது': காஜல் அகர்வால் சொன்ன பகீர் சம்பவம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved