Hit 3: முதல் நாளே சாதனை, பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த நானி!
நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், சைலேஷ் கொலனு இயக்கத்தில் வெளியாகியுள்ள அதிரடி ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர் படமாக வெளியாகியுள்ள ஹிட் 3. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

நானியின் ஹிட் 3 வசூல் அறிக்கை
நானி, சைலேஷ் கொலனு கூட்டணியில் உருவான சைக்கோ த்ரில்லர் படம் ஹிட் 3. நானி தயாரிப்பில் வெளியான ஹிட் 1, ஹிட் 2 படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளது மட்டும் இன்றி, தயாரிப்பாளராகவும் களமிறங்கி உள்ளார். நேற்று (மே 1 ஆம் தேதி) வெளியான இப்படத்திற்கு, கலவையான விமர்சனங்கள் வந்தன. சிலர் படம் அருமையாக இருப்பதாகக் கூறினாலும், சிலர் சராசரி என்று கூறினர். ஆனால், படத்தின் வசூல் சிறப்பாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க: நான்கு முதல்வர்களுடன் நடித்த நடிகை, 4 மொழிகளில் 400 படங்களில் நடித்தவர் யார்? (+ta)
நானியின் ஹிட் 3
தெலுங்கில் நானியின் ரசிகர்கள், ஹிட் 3 படத்தை, திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் சைலேஷ் கொலனுவின் இயக்கமும் தனித்துவமாக உள்ளதாக கூறி வருகிறார்கள். அதே போல் வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அங்கு மில்லியன் டாலர் வசூல் சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹிட் 3 டீஸர்:
நானியின் முந்தைய படமான தசராவை விட, ஹிட் 3 படம் முதல் நாள் வசூலில் சாதனை படைத்துள்ளது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், சமூக ஊடகங்களில் வசூல் விவரங்கள் வைரலாகி வருகின்றன. முதல் நாளில் 30 முதல் 40 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், தயாரிப்பாளர்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
நடிகர் நானியின் ஹிட் 3
அமெரிக்காவில் முதல் நாளே 1 மில்லியன் டாலர் வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த வார இறுதியில் 2 மில்லியன் டாலர் வசூலை எளிதாகக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நானியின் ஹிட் 3 இல் இரண்டு இளம் நாயகர்கள்
படத்தின் வசூல் சாதனையால் நானி மகிழ்ச்சியடைந்துள்ளார். இப்படத்தின் மூலம் முன்னணி நடிகர்கள் வரிசையில் இணைந்துள்ளார். விரைவில் பெரிய பட்ஜெட் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.