MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரூமுக்கு வா சரக்கடிக்கலாம்... சில்மிஷம் செய்த தயாரிப்பாளர் மீது போலீசில் பரபரப்பு புகார் அளித்த சீரியல் நடிகை

ரூமுக்கு வா சரக்கடிக்கலாம்... சில்மிஷம் செய்த தயாரிப்பாளர் மீது போலீசில் பரபரப்பு புகார் அளித்த சீரியல் நடிகை

தயாரிப்பாளர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக இந்தி சீரியல் நடிகை ஜெனிபர் மிஸ்ட்ரி பன்சிவால் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : May 12 2023, 01:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இந்தியில் புகழ்பெற்ற சாப் தொலைக்காட்சியில் ‘தாரக் மெஹ்தா கா ஊல்டா சஸ்மா” என்கிற நெடுந்தொடர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஜெனிபர் மிஸ்ட்ரி பன்சிவால். அவர் அந்த சீரியலின் தயாரிப்பாளரான அசித் குமார் மோடி மீது பாலியல் புகார் கொடுத்துள்ள சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

இதுகுறித்து மும்பையில் உள்ள பவாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள ஜெனிபர், தயாரிப்பாளர் அசித் குமார் மோடி தன்னை தனியாக ரூமுக்கு வா சரக்கடிக்கலாம் என அழைத்ததது மட்டுமின்றி அடிக்கடி தன்னிடம் ஆபாசமாக பேசி, தவறாக தொட்டு எல்லைமீறி நடந்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது நடவடிக்கை பிடிக்காமல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே அந்த தொடரை விட்டு வெளியேற முயன்றதாகவும், அப்படி விலகினால் தனது 4 மாத சம்பளத்தை பிடித்தம் செய்வோம் என அந்த தொடரின் இணைத் தயாரிப்பாளர்கள் தன்னை மிரட்டியதாகவும் ஜெனிபர் கூறினார். 

இதையும் படியுங்கள்... Good Night Movie Review : இனிமே குறட்டை விடுவீங்க...! ''குட் நைட்'' திரைவிமர்சனம்!

34

அசித் மோடியை போல் அந்த இணைத் தயாரிப்பாளர்களும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஜெனிபர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நடிகை ஜெனிபர் சொல்வது அனைத்துமே பொய் என்று தயாரிப்பாளர் அசித் மோடி திட்டவட்டமாக கூறி உள்ளார். அதுமட்டுமின்றி தன்னைப்பற்றி ஜெனிபர் அவதூறு பரப்பி வருவதாக தயாரிப்பாளர் அசித் மோடி தரப்பில் இருந்தும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாம்.

44

அவர் அளித்துள்ள புகாரில், நடிகை ஜெனிபரின் நடத்தை சரியில்லை என்றும், அவர் ஒழுங்காக ஷூட்டிங்கிற்கு வரவில்லை என்பதனால் தான் அவரை சீரியலை விட்டு தூக்கினோம் என குறிப்பிட்டு உள்ளார். மேலும், வேலை போன விரக்தியில் தான் ஜெனிபர் என்மீதும் சீரியலில் பணியாற்றுபவர்கள் மீதும் பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இதனால் அவர்மீது மானநஷ்ட வழக்கு பதிவு செய்துள்ளேன் என அசித் மோடி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... Raavana kottam Review : சாந்தனு பாக்யராஜின் ''இராவண கோட்டம்'' திரை விமர்சனம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
Recommended image2
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Recommended image3
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved