குருதி புனல் முதல்; உத்தம வில்லன் வரை - தமிழ் சினிமா தாமதமாக கொண்டாடிய கமலின் டாப் 5 படங்கள்!
Kamalhaasan : தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான எத்தனையோ திரைப்படங்களுக்கு, அவை வெளியான போது கிடைத்த பாராட்டுகளை விட காலம் கடந்து கிடைத்த பாராட்டுகளே அதிகம்.
Kamal movies
அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகிய இருவரும் இணைந்து நடித்து அசத்திய திரைப்படம் தான் "குருதிப்புனல்". கடந்த 1995 ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் இயக்கி வெளியான திரைப்படம் அது. இந்த திரைப்படத்தில் பாடல்களே கிடையாது. நடிகை கௌதமி, நடிகர்கள் நாசர் மற்றும் பசுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்கள். இன்றைக்கு இந்த படம் வெளியானால் கூட அவ்வளவு புதிதாக காணப்படும், அந்த அளவிற்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல உச்சத்தை பெற்றாலும் கன்டென்ட் ரீதியாக அப்போது மிகப்பெரிய சறுக்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் அம்பானி போல் வாழும் நடிகர் நெப்போலியனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Hey Ram
கடந்த 2000வது ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்த திரைப்படம் தான் "ஹே ராம்". இன்றளவும் பிரபல பாலிவுட் கிங் ஷாருக்கான் தமிழில் நேரடியாக நடித்த ஒரே திரைப்படம் இது தான். உண்மையில் இந்த திரைப்படம் அந்த காலகட்டத்தில் பெரிய அளவில் யாராலும் பாராட்டப்படவில்லை. நுட்பமான பல விஷயங்களை இந்த திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருப்பர். சுமார் 23 ஆண்டுகள் கழித்து தற்பொழுது OTT தலத்தில் இந்த திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் மக்கள் இப்போது இந்த திரைப்படத்தை பெரிய அளவில் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
Aalavandhan
தமிழ் சினிமாவில் இனி இப்படி ஒரு திரைப்படம் எடுக்கப்படாது என்று சொல்லும் அளவிற்கு பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டில் வெளியாகி பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும், இப்போது இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் நடிகர் கமலஹாசனின் நடிப்பை வியந்து பாராட்டி மக்கள் கொண்டாடி வரும் திரைப்படம் தான் "ஆளவந்தான்". இந்த திரைப்படமும் தற்பொழுது OTT தளத்தில் வெளியான பிறகு தான் பெரிய அளவிலான வரவேற்புகளை பெற்று வருகிறது. நந்தகுமார் மற்றும் விஜயகுமார் என்று இரண்டு வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து கமலஹாசன் அசத்தியிருப்பார். அது மட்டுமல்ல இந்த திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் சாதனைகளை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Anbe Sivam
கடந்த 2003ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "அன்பே சிவம்". இந்த திரைப்படத்தைப் பற்றி இப்போது பேசாத ஆளே இல்லை என்று சொன்னாலும் அது மிகையல்ல. ஆனால் இந்த திரைப்படம் வெளியான பொழுது இதை பெரிய அளவில் பிளாப்பாக்கி மக்கள் அதை கொண்டாடாமல் போனது இன்றளவும் தனக்கு வருத்தத்தை மட்டுமே தருகிறது என்று சுந்தர் சி பல மேடைகளில் கூறியிருக்கிறார். கொண்டாட வேண்டிய இடத்தில் ஒரு திரைப்படத்தை கொண்டாடாமல் விட்டுவிட்டு, காலம் கடந்து அதை கொண்டாடி எந்தவிதமான பிரயோஜனமும் இல்லை என்று சுந்தர் சி வருத்தப்பட்டுள்ளார்.
Uttama Villain
கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, நாசர், மூத்த நடிகர் விஸ்வநாத், இயக்குனர் கே பாலச்சந்தர் என்று பலருடைய நடிப்பில் வெளியான படம் தான் "உத்தம வில்லன்". இந்த திரைப்படத்தின் கதையும் உண்மையில் மிகவும் வித்தியாசமாக அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் இந்த திரைப்படமும் இது வெளியான நேரத்தில் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. ஆனால் இப்போது இந்த திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மூவி சான்ஸ் இல்லனா என்ன ஓடிடியில் கலக்கும் சமந்தா – எத்தனை கோடி சம்பளம் வாங்குறாரு தெரியுமா?