புகழ்பெற்ற ஹாரிபாட்டர் நடிகர் 'ராபி கோல்ட்ரேன்' காலமானார்..
ஹாக்ரிட் என்று அழைக்கப்படும் ரோலில் தோன்றியிருந்தார். மந்திரவாதியாக வந்து ஹாரிக்கு அதிகம் உதவியவராக தோன்றி சிறுவர்களை கவர்ந்திருந்தார்.
Harry Potter
மாயாஜால உலகை கண் முன் நிறுத்திய ஹாரி பாட்டர் படத்தை யாருக்குத்தான் பிடிக்காது. சிறுவயதில் பலரும் மாயாஜால உலகத்திற்கே சென்று வந்திருப்போம். அந்த அளவிற்கு ஹாரிபாட்டர் என்பது 80- 90 களில் சிறுவர்களின் மனதில் பதிந்துவிட்டது. உலக அளவில் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக விற்பனையான புத்தகம் என்றால் அது ஹாரிபாட்டர் தான்.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜேகே ரவ்லிங் எழுதிய ஹாரி பாட்டர் புத்தகம் உலக அளவில் பிரபலம். பிரம்மாண்ட வரவேற்பு பெற்ற இந்த புத்தகத்தை தொடர்ந்து திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. இதில் ஹாரி பாட்டராக டேனியல் ராட்கிளஃப் நடித்திருந்தார். கற்பனையில் உருவான மிருகங்கள் ராட்சசர்கள், மேஜிக், துடப்பம் பறப்பது என நம்மை வேறொரு உலகிற்கு இட்டுச் சென்ற ஹாரி பாட்டரில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ராபி கால்ட்ரேன்.
மேலும் செய்திகளுக்கு...NC 22 : மாநாடு படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் NC 22-ல் இணைந்தார் பிரேம்ஜி
8 பாகங்களாக வெளியான இதில் நீளமான தாடி, தொளதள கோட், தொப்பையும் என மனங்களை கவர்ந்திருப்பார். இவர் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான கோல்டன் ஐ மற்றும் தி வேர்ல்ட் இஸ் நாட் எனஃப் ஆகிய படங்களிலும் இவர் தோன்றியுள்ளார். 2001 மற்றும் 2011 க்கு இடையில் வெளியான அனைத்து ஹாரி பாட்டர் படங்களிலும் ராபி கால்ட்ரேன் இடம் பெற்றிருப்பார்.
Robbie Coltrane
ஹாக்ரிட் என்று அழைக்கப்படும் ரோலில் தோன்றியிருந்தார். மந்திரவாதியாக வந்து ஹாரிக்கு அதிகம் உதவியவராக தோன்றி சிறுவர்களை கவர்ந்திருந்தார். பிரிட்டனின் ஸ்காட்லாந்தை சேர்ந்த 72 வயதான ராபி கால்ட்ரேனுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்காட்லாந்தில் உள்ள மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். இவர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...Nayanthara : பற்றி எரியும் வாடகைத்தாய் விவகாரம்; எஸ்கேப் ஆன நயன்தாரா!!