புதிய திரில்லரில் ஹன்ஷிகாவிற்கு வில்லனாகும் பிக் பாஸ் ஆரி அருஜுனன்!
ஆரி அருஜுனன் குணாதிசயங்கள் இதுவரை நாம் படங்களில் பார்த்த வில்லன்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என இயக்குனர் கூறியுள்ளார்.

hansika
தென்னிந்திய நடிகைகளில் பிரபலமானவர் ஹன்சிகா. சமீபகாலமாக மார்க்கெட்டில் சரிவை சந்தித்து வரும் ஹன்சிகா சமீபகாலமான கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் த்ரில்லர்களை விரும்புவதாகத் தெரிகிறது. இவர் இப்போது இகோர் இயக்கும் மற்றொரு திரில்லர் படத்தின் ஒரு பகுதியாக ஒப்பந்தமாகியுள்ளார் . சமீபத்தில் படப்பிடிப்புக்கு வந்த இப்படத்தில் ஆரி அருஜுனனும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.
hansika
படத்தைப் பற்றி இயக்குனர் இகோர் கூறும்போது, “இந்தப் படம் ஒரு மோசமான மனிதனிடம் சிக்கி கொள்ளும் சில பெண்களைப் பற்றியது. ஹன்சிகாவின் கேரக்டர் தான் இந்தப் பெண்களை பிரச்சினையிலிருந்து காப்பாற்றுகிறது. பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் படம் பேசுகிறது. இந்தக் கதையில் ரொமான்ஸுக்கு ஸ்கோப் இல்லை, இது ஒரு த்ரில்லராக இருக்கும்.
இப்படத்தில் ஹன்சிகா ஆடை வடிவமைப்பாளராக நடிக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார். “ஹன்சிகாவின் நடிப்புக்கு இன்னொரு பக்கத்தைக் காட்ட விரும்புகிறேன். அவரது பாத்திரம் ஒரு மென்மையான பேசும் பெண், ஆனால் அத்தகைய நபர்கள் பெரும்பாலும் மிகவும் தீவிரமான கோபத்தைக் கொண்டிருப்பார்கள். அத்தகைய அமைதியான நபர் தனது கோபத்தைக் காட்டினால் என்ன நடக்கும்? அதுதான் படம்” என்கிறார் இகோர்.
Aari Arujunan
ஆரி குறித்து இகோர் கூறுகையில் ஒரு தனித்துவமான பாத்திரம். அவர் “கணினி பொறியாளராக நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் அவரது குணாதிசயங்கள் இதுவரை நாம் படங்களில் பார்த்த வில்லன்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.
ஏற்கனவே சென்னை, மதுரை மற்றும் பொள்ளாச்சியிலும் படப்பிடிப்பை நடத்தவுள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். "இரண்டு பாடல்கள் இருக்கும், இவை இரண்டும் கதையை முன்னெடுத்துச் செல்லும். சுவாரசியமான சண்டைக் காட்சிகளும் இருக்கும், அவை எதார்த்தமான முறையில் செய்யப்படும்” என்கிறார் இயக்குனர்.