- Home
- Cinema
- யூத் பட வசூலில் பாதி கூட வரல... பாக்ஸ் ஆபிஸில் டம்மியான ஹாப்பி ராஜ் - முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?
யூத் பட வசூலில் பாதி கூட வரல... பாக்ஸ் ஆபிஸில் டம்மியான ஹாப்பி ராஜ் - முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?
மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள ஹாப்பி ராஜ் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

Happy Raj Day 1 Box Office
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாக தற்போது பிசியான நடிகராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வந்துள்ள படம் ஹாப்பி ராஜ். இப்படத்தை மரியா ராஜா இளஞ்செழியன் என்கிற புதுமுக இயக்குநர் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் கெளரி பிரியா, பிராத்தனா, ஜார்ஜ் மரியான், அப்பாஸ், அதிர்ச்சி அருண் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 80-ஸில் சாக்லேட் பாயாக வலம் வந்த அப்பாஸுக்கு இது ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் நாயகியின் தந்தை வேடத்தில் நடித்திருக்கிறார்.
வரவேற்பை பெறும் ஹாப்பி ராஜ்
ஹாப்பி ராஜ் திரைப்படம் உருவ கேலியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் காமெடி காட்சிகள் பெரும்பாலான இடங்களில் ஒர்க் அவுட் ஆகி இருப்பதால், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இப்படம் மட்டும் நேற்று சோலோவாக ரிலீஸ் ஆனதால் இதற்கு அதிகப்படியான திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன. நேற்று மட்டும் 801 காட்சிகள் இப்படத்திற்காக திரையிடப்பட்டன. ஹாப்பி ராஜ் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், இப்படத்தின் முதல் நாள் வசூல் மிகவும் சுமாரானதாக இருக்கிறது.
ஹாப்பி ராஜ் வசூல்
ஹாப்பி ராஜ் திரைப்படம் நேற்று சோலோவாக ரிலீஸ் ஆன போதும் அப்படம் 1 கோடி கூட வசூலிக்கவில்லை. அப்படத்திற்கு இந்தியாவில் வெறும் 65 லட்சம் மட்டுமே வசூல் கிடைத்திருக்கிறது. உலகளவில் ரூ.75 லட்சம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஜிவி பிரகாஷின் முந்தைய படங்கள் தான். அவர் கடைசியாக நடித்த படங்கள் அவருக்கு பெரியளவில் கைகொடுக்கவில்லை. ஹீரோவாக தொடர்ந்து சொதப்பியதால் ஹாப்பி ராஜ் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இப்படத்தின் வசூல் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாப்பி ராஜை அடிச்சு தூக்கிய யூத்
ஹாப்பி ராஜ் படம் கடந்த வாரம் வெளியான கென் கருணாஸின் யூத் படத்தின் முதல் நாள் வசூலில் பாதிகூட வசூலிக்கவில்லை. யூத் திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.3.5 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. அதில் 20 சதவீதம் மட்டுமே ஹாப்பி ராஜ் படம் வசூலித்திருக்கிறது. யூத் படம் திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் யூத் படத்திற்கு இசையமைத்தது ஹாப்பி ராஜ் பட நாயகன் ஜிவி பிரகாஷ் தான். இருப்பினும் ஹாப்பி ராஜ் படத்திற்கு அவர் இசையமைக்கவில்லை. அப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

