GV Prakash Ayngaran : இப்பதான் ரெண்டு வந்துச்சு.. அதுக்குள்ள இன்னொன்னா! விஜய் சேதுபதிக்கே டஃப் கொடுக்கும் ஜிவி
தமிழ் சினிமாவில் சமீப காலமாக நடிகர் விஜய் சேதுபதி ஒரே மாதத்தில் 2, 3 படங்கள் வெளியிட்டு வந்தார். தற்போது அவருக்கே டஃப் கொடுக்கும் விதமாக ஜிவி பிரகாஷ் களமிறங்கி உள்ளார்.
இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, இன்று வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜிவி பிரகாஷ். இவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன.
ஐங்கரன், காதலிக்க நேரமில்லை, 4 ஜி, ஆயிரம் ஜென்மங்கள், இடிமுழக்கம், அடங்காதே, ரிபெல், செல்பி உள்ளிட்ட படங்கள் உள்ளன. இவற்றுள் ஏராளமான படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன.
அண்மையில் ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சிலர் மற்றும் ஜெயில் ஆகிய படங்கள் திரையரங்குகளில் ஒரு வார இடைவெளியில் வெளியானது. இதில் பேச்சிலர் படம் அமோக வரவேற்பை பெற்றது. ஆனால் ஜெயில் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம்.
இந்நிலையில், ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள ஐங்கரன் படமும் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் அடுத்த மாதம் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இப்படத்தை அதர்வாவின் ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். இதில் ஜிவி பிரகாஷ் மெக்கானிக்கல் இஞ்சினியராக நடித்துள்ளார்.
ஏற்கனவே விஷாலின் வீரமே வாகை சூடும் படமும் ஜனவரி 26-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அப்படத்துக்கு போட்டியாக ஜிவி பிரகாஷின் ஐங்கரன் படம் ரிலீசாக உள்ளது.
தமிழ் சினிமாவில் சமீப காலமாக நடிகர் விஜய் சேதுபதி தான் ஒரே மாதத்தில் 2, 3 படங்கள் வெளியிட்டு வந்தார். தற்போது அவருக்கே டஃப் கொடுக்கும் விதமாக ஜிவி பிரகாஷ் களமிறங்கி உள்ளார்.