MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நயன்தாரா திருமணத்துக்காக கடற்கரையில் இப்படி ஒரு பிரம்மாண்ட செட்டா.. ஷங்கர் படத்தையே மிஞ்சிடுவாங்க போல

நயன்தாரா திருமணத்துக்காக கடற்கரையில் இப்படி ஒரு பிரம்மாண்ட செட்டா.. ஷங்கர் படத்தையே மிஞ்சிடுவாங்க போல

Nayanthara wedding : நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்துக்கு இரு தினங்கள் மட்டுமே எஞ்சி உள்ளதால், ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

1 Min read
Author : Ganesh A
Published : Jun 07 2022, 01:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வருகிற ஜூன் 9-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. முதலில் திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்த அந்த ஜோடி, அங்கு அனுமதி கிடைக்காததால் மகாபலிபுரத்தில் கடற்கரை ஓரம் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.

24

இவர்களது திருமணத்தின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளதாக இயக்குனர் விக்னேஷ் சிவன், இன்று காலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். இவர்களது திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் அதிக தொகை கொடுத்து வாங்கி உள்ளது. இந்த திருமணத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்தும் பொறுப்பு இயக்குனர் கவுதம் மேனன் ஏற்றுள்ளார்.

34

திருமணத்துக்கு இரு தினங்கள் மட்டுமே எஞ்சி உள்ளதால், ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் கடற்கரையில் வைத்து திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும், இவர்களது திருமணத்துக்காக கண்ணாடி மாளிகை போன்ற பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறதாம்.

44

விக்கி கவுஷல் - கத்ரீனா கைஃப் மற்றும் விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஆகிய ஜோடிகளின் கல்யாணத்தில் பணியாற்றிய திருமண ஏற்பாட்டாளர்கள் தான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வேலைகளையும் கவனித்து வருகிறார்களாம். இதுதவிர பல்வேறு சர்ப்ரைஸான விஷயங்களும் இவர்களது திருமணத்தில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... லைஃப்ல அடுத்த கட்டத்துக்கு போகப்போறோம் - நயனுடன் திருமணம்... அதிகாரப்பூர்வமாக அறிவித்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image2
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image3
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved