சினிமா நடிகராக அவதாரம் எடுக்கும் 'டிக் டாக்' பிரபலம் ஜி.பி.முத்து..!
'டிக் டாக்' செயலி மூலம் பிரபலமான, பலர் நடிகர் - நடிகைகளாக அவதாரம் எடுத்து வரும் நிலையில், இலக்கியாவை தொடர்ந்து, ஜி.பி.முத்து தற்போது தான் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார். இதற்க்கு வழக்கம் போல்... வாழ்த்துக்களும் சில சர்ச்சையான பதிவுகளையும் பதிவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடியைச் சேர்ந்தவர் ஜி.பி.முத்து, டிக்-டாக் மூலம் பிரபலமான இவர், 'டிக் டாக்' செயலி மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யாவுடன் ரொமான்டிக் பாடல்களை பாடி பிரபலமானவர்.
ஜி.பி.முத்துவின் டிக்டாக் வீடியோக்களை கலாய்ப்பதற்கு என்று சோசியல் மீடியாவில் பல குரூப் உலவிக்கொண்டிருந்தது. இதனால் கடுப்பான ஜி.பி.முத்துவும் அவர்களை திட்டி... வாயிற்கு வந்த வார்த்தையால் திட்டி பதிவிடும் வீடியோக்களும் வைரலாகி விடும்.
டிக்டாக் தடையால் மிகவும் மனம் உடைந்த அவர், பிரதமர் மோடிக்கெல்லாம் கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டார். டிக்டாக் தடை காரணமாக தற்போது முகநூல் பக்கங்களில் தொடர்ந்து தன்னுடைய வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
பழைய மர பொருட்களை பழுது பார்க்கும் வேலை செய்து வரும், இவர் சமீபத்தில் கொரோனா பிரச்சனை காரணமாக தொழில் நஷ்டமடைந்ததாலும், தந்தையுடன் ஏற்பட்ட மன கஷ்டம் காரணமாகவும் தற்கொலை செய்து கொள்ள முயன்று, தீவிர சிகிச்சைக்கு பின் அதில் இருந்து மீண்டு வந்தார்.
அவ்வப்போது... இவருடைய ரசிகர்கள் பல்வேறு பரிசுகளை இவருக்கு அனுப்ப, அதனை விடியோவாகவும் வெளியிட்டு வருகிறார் ஜி.பி.முத்து.
இந்நிலையில், திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறி முகநூல் பக்கத்தில் ஜம்முனு வேஷ்டி சட்டையில்... பட்டு துண்டு அணிந்தபடி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இவர் சினிமாவில் நடிக்க உள்ளதற்கு, ஒரு தரப்பினர் வாழ்த்துக்கள் கூறி வந்தாலும், வழக்கம் போல் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.