என்னப்பா ஹீரோயின் ஆம்பள மாதிரி இருக்கு..! கவுண்டமணி கிண்டலடித்த அந்த நடிகை யார் தெரியுமா?
தமிழ் திரையுலகில் நகைச்சுவை மன்னனாக கொடிகட்டி பறந்துவந்த கவுண்டமணி ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயின் ஆம்பள மாதிரி இருப்பதாக கூறி கிண்டலடித்த சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்கள் என்றால் விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த லிஸ்ட்டில் முன்னிலை வகிப்பவர் கவுண்டமணி. செந்தில் உடன் சேர்ந்து இவர் செய்யும் காமெடி கலாட்டாக்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நக்கல் மன்னனாக வலம் வந்த கவுண்டமணி படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் யாராக இருந்தாலும் நக்கலடித்துவிடுவாராம். அப்படி ஒரு சம்பவத்தை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம்.
கவுண்டமணி ஒரு சில நடிகர்களுடன் சேர்ந்தால் அவர்களது கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகிவிடும். அப்படிப்பட்ட ஒரு நடிகர் தான் சத்யராஜ். இவர்கள் இருவரும் சேர்ந்தால் படத்தில் மட்டுமல்ல ஷூட்டிங் ஸ்பாட்டே கலகலப்பாக மாறிவிடுமாம். அப்படி சத்யராஜ் நாயகனாக நடித்த தங்கம் என்கிற திரைப்படத்தில் கவுண்டமணியும் நகைச்சுவை நடிகராக நடித்து வந்துள்ளார். அப்போது சத்யராஜ் ஹீரோயினுடன் நடித்த காட்சியை கவுண்டமணி அமைதியாக அமர்ந்து பார்த்தாராம்.
இதையும் படியுங்கள்... ஆபாச வெப்சைட்டில் போட்டோ... பார்ன் ஸ்டார் என அழைத்து டார்ச்சர் பண்ணிய தந்தை - கவர்ச்சி நடிகை கண்ணீர் பேட்டி
அந்த காட்சி படமாக்கி முடிக்கப்பட்ட பின்னர் சத்யராஜை அழைத்து, அடுத்த 50 நாளைக்கு நீ ஆம்பள கூட தான் நடிக்கனும்பானு சொன்னாராம். இதற்கு சத்யராஜ் ஆமா அண்ணே நீங்களும் ஆம்பள தான என சொல்ல, உடனே, அட நான் ஹீரோயின சொன்னேன்பா, அந்த பொண்ணு பார்க்க ஆம்பள மாதிரி தான் இருக்குன்னு சொல்லிவிட்டாராம்.
தங்கம் படத்தில் நடிகர் சத்யராஜுக்கு ஜோடியாக மலையாள நடிகை மேக்னா நாயர் தான் நடித்திருந்தார். அந்த நடிகையை தான் பார்ப்பதற்கு ஆம்பள மாதிரி இருப்பதாக கூறி கிண்டலடித்து இருக்கிறார் கவுண்டமணி. இந்த தகவலை நகைச்சுவை நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... Ayalaan : தீபாவளி ரேஸில் அயலான்... தனுஷுடன் நேருக்கு நேர் மோத முடிவெடுத்த சிவகார்த்திகேயன்?