MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Godfather movie : சூப்பர்ஸ்டார் படத்தில் நயன்தாரா... ஹாட்ரிக் கூட்டணியால் விஜய் பட இயக்குனர் செம்ம ஹாப்பி

Godfather movie : சூப்பர்ஸ்டார் படத்தில் நயன்தாரா... ஹாட்ரிக் கூட்டணியால் விஜய் பட இயக்குனர் செம்ம ஹாப்பி

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் பெண் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

1 Min read
Author : Ganesh A | Asianet News
| Updated : Feb 17 2022, 07:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா (Nayanthara). இவர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். அண்மையில் பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். அங்கு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இவர் கைவசம் தமிழில், விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, அஸ்வின் சரவணன் இயக்கும் ‘கனெக்ட்’, விக்னேஷ் இயக்கும் O2, மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் ‘கோல்டு’ போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கிலும் ‘காட்ஃபாதர்’ (Godfather) என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

35

‘காட்ஃபாதர்’ படத்தை மோகன்ராஜா (MohanRaja) இயக்குகிறார். இது மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இப்படத்தில் நடிகர் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். இதில் நடிகை நயன்தாரா பெண் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது.

45

தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் மோகன் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘காட்ஃபாதர்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகை நயன்தாராவுடன் (Nayanthara) எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “காட்ஃபாதர் படத்தின் முக்கிய கட்ட படப்பிடிப்பை லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் நடத்தி முடித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

55

மேலும் நயன்தாராவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி எனவும் மோகன் ராஜா குறிப்பிட்டுள்ளார். நடிகை நயன்தாரா ஏற்கனவே மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் தனி ஒருவன், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வேலைக்காரன் போன்ற படங்களில் பணியாற்றி இருந்தார். இயக்குனர் மோகன்ராஜா நடிகர் விஜய்யின் வேலாயுதம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதையும் படியுங்கள்.... நயன்தாராவுக்கு வாணி போஜன் மேலே இன்னா பயம்..? வயசு தெரிஞ்சுடுமோ..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Master Mahendran : என்னை திமிர் பிடித்தவன் என்று சித்தரிக்காதீர்கள்... உருக்கமாக பேசிய மாஸ்டர் மகேந்திரன்
Recommended image2
AR Rahman இசையில் இயக்குநர் வெங்கட் பிரபு பாடிய அடிபொலி ஹிட் பாடல் பற்றி தெரியுமா?
Recommended image3
Suriya-Jyothika : சூர்யா-ஜோதிகாவின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா? ராஜா-ராணியின் அசைக்க முடியாத சாம்ராஜ்யம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved