காதல் கண்கட்டுதே...! கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் ஜோடியின் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ...
3 ஆண்டுகளாக காதலித்து வந்த கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் ஜோடிக்கு இன்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன், ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, தேவராட்டம் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து பிரபலம் ஆனார்.
இவர் முத்தையா இயக்கிய தேவராட்டம் படத்தில் நடித்த போது, அப்படத்தின் ஹீரோயினான மஞ்சிமா மோகன் மீது காதல் வயப்பட்டார். நடிகை மஞ்சிமா மோகன் மலையாள நடிகை ஆவார். இவர் சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து தேவராட்டம் படத்தில் நடித்தபோது தான் இவருக்கும், கவுதம் கார்த்திக்கிற்கும் இடையே காதல் மலர்ந்தது.
இதையும் படியுங்கள்... அஜித் - ஷாலினி முதல் கவுதம் - மஞ்சிமா வரை! ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடி ஆன கோலிவுட் பிரபலங்களின் லிஸ்ட் இதோ
கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி இன்று திருமணம் செய்துகொண்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணத்தை எளிமையான முறையில் நடத்தி உள்ளனர். தற்போது இவர்களது திருமண புகைப்படம் வெளியாகி உள்ளது.
அதன்படி திருமணத்தில் கவுதம் கார்த்திக் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்தும், மஞ்சிமா அவருக்கு மேட்சிங்காக வெள்ளை நிற புடவை அணிந்தும் ஜோடியாக நின்றபடி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. நடிகர் விக்ரம் பிரபு நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதேபோல் இயக்குனர்கள் மணிரத்னம், கவுதம் மேனன், நடிகர்கள் ஜீவா, ஆர்.ஜே.பாலாஜி, அசோக் செல்வன், ஆதி, சிவக்குமார், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா, நடிகை நிக்கி கல்ராணி ஆகியோரும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் ஜோடியை வாழ்த்தினர்.
இதையும் படியுங்கள்... 3 வயதில் சினிமா எண்ட்ரி முதல் காதல் திருமணம் வரை... மஞ்சிமா மோகன் பற்றி பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய பின்னணி