10-ஆம் ஆண்டு திருமண நாளில் குட் நியூஸ் சொன்ன கணேஷ் வெங்கட்ராமன் குவியும் வாழ்த்து!
Ganesh Venkatraman Bought a New Car : பிக்பாஸ் பிரபலமும் நடிகருமான கணேஷ் வெங்கட்ராமன் தன்னுடைய 10-ஆம் ஆண்டு திருமண நாளை சிறப்பிக்கும் விதமாக புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

கணேஷ் வெங்கட்ராமன் 10ஆம் ஆண்டு திருமண நாள்
தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான நடிப்பாலும், உயரமான ஸ்கிரீன் பிரசென்ஸினாலும் ரசிகர்களிடம் அதிக கவனம் பெற்றவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். இயக்குனர் ராதா மோகன் இயக்கிய 'அபியும் நானும்' திரைப்படம் மூலமாக 2008ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் காலடி வைத்த இவர், முதல் படத்திலேயே மெச்சத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்தார். அந்த படத்தின் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சி பூர்வமான நடிப்பு அவருக்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது.
'அபியும் நானும்' வெளியான பின், தீயா வேலை செய்யனும் குமாரு, கோ, உன்னைப் போல் ஒருவன், பனித்துளி போன்ற பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், நட்சத்திர அந்தஸ்தை பெற வேண்டிய அளவிற்கு வாய்ப்புகள் இவருக்கு தொடர்ந்து அமைக்கவில்லை. அழகான முகத்துடன், நல்ல உடல் அமைப்புடன் இருந்தபோதும், அவரின் திறமைகள் முழுமையாக வெளிப்பட ஒரு ஸாலிட் கதாபாத்திரம் கிடைக்காததே காரணமாக பலரும் குறிப்பிடினர்.
கணேஷ் வெங்கட்ராமன்
இந்நிலையில், சின்னத்திரையில் புதிய அனுபவங்களை எதிர்நோக்கி, கணேஷ் வெங்கட்ராமன் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார். அப்போது அவர் காட்டிய அமைதியான நடத்தை, வெளிப்படையான சிந்தனை, யாரையும் காயப்படுத்தாமல் பேசும் பழக்கம், போட்டியாளர்களை புரிந்து கொள்கின்ற பொறுமை போன்றவற்றால் ரசிகர்கள் அவரை “நேர்மையின் அடையாளம்” என அழைத்தனர். அந்த சீசனில் அவர் இறுதிப்போட்டிவரை முன்னேறியது அவரின் தனிப்பட்ட கட்டுப்பாட்டையும், மக்களிடையே பெற்ற மரியாதையையும் வெளிப்படுத்தியது.
திரைப் பயணத்தைத் தாண்டி, அவரது தனி வாழ்க்கையும் ரசிகர்களிடையே அதிக கவனத்தை பெற்றது. பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளருமான, நடிகையுமான நிஷாவை 2015ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார் கணேஷ். படப்பிடிப்புகளில் சந்தித்த நட்பு, பின்னர் காதலாக மாறியது. இந்தத் திருமணம் சினிமா உலகிலும், தொலைக்காட்சி துறையிலும் பெரும் வரவேற்பு பெற்றது. தற்போது இத்தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தை முன்னிலைப்படுத்தும் விதத்தில் தம்பதியர் அடிக்கடி பகிரும் புகைப்படங்களும், ரீல்களும் ரசிகர்களிடையே வைரலாகும்.
10ஆம் ஆண்டு திருமண நாள்
இவர்கள் இன்று தங்களின் 10-ஆம் ஆண்டு திருமண நாளை சிறப்பிக்க, புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர். கார் டெலிவரி பெற்றபோது எடுத்த புகைப்படங்களையும், குடும்பத்துடன் எடுத்த சின்னச் சின்ன காட்சிகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதை தொடர்ந்து ரசிகர்களும் இவர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.