தபு முதல் நயன்தாரா வரை.. ஏற்கனவே திருமணமான ஆண்களுடன் ரகசிய உறவு வைத்திருந்த நடிகைகள்..
தென்னிந்தியத் திரையுலகில் அதிகம் பேசப்பட்ட திருமணத்திற்கு அப்பாற்பட்ட சில உறவு குறித்து பார்க்கலாம்.
காதல் என்பது ஒரு பொதுவான உணர்வு. எனினும் காதல் பற்றிய கருத்து ஒவ்வொரு தனிநபருக்கும் வேறுபட்டது. முதல் பார்வையிலேயே காதல் வயப்படுபவர்கள் சிலர் இருந்தாலும், ஏற்கனவே திருமணவர்களை காதலிக்கும் சிலரும் இருக்கின்றனர். இந்த காதல் விவகாரங்கள் தான் திருமணத்திற்கு புறம்பான விவகாரங்கள் என்று பகிரங்கமாக அறியப்படுகிறது. சாதாரண மக்கள் மட்டுமின்றி, திரைத்துறையிலும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட சில உறவுகள் இருக்கின்றன. அவை அவ்வப்போது தலைப்பு செய்தியாகவும் மாறுகின்றன. தென்னிந்தியத் திரையுலகில் அதிகம் பேசப்பட்ட திருமணத்திற்கு அப்பாற்பட்ட சில உறவு குறித்து பார்க்கலாம்.
தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரேகாவுக்கு அறிமுகம் தேவையில்லை. 80-களில் பாலிவுட்டில் கொடிகட்டி பறந்த நடிகை ரேகாவின் நடிப்பு திறமை அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் அவர் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை காதலித்து வந்தார். மேலும் அவர் அவரது திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்ததாகவும் அப்போது பேசப்பட்டது. அமிதாப் இந்த உறவை பற்றி வெளிப்படையாக பேசவில்லை என்றாலும், ரேகா தனது காதலை வெளிப்படையாக கூறிவந்தார். ஒருக்கட்டத்தில் இந்த ஜோடி பிரிந்தாலும், தற்போது 61 வயதாகும் ரேகா திருமணம் செய்யாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவின் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்துள்ளார். எனினும் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துள்ள மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்த தம்பதிக்க்கு உயிர், உலக் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இருப்பினும், ஏற்கனவே திருமணமான பிரபல நடன இயக்குனருமான பிரபுதேவாவுடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்ததற்காக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. நயன்தாரா - பிரபுதேவா இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. அதற்காக தனது 16 ஆண்டு திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார். எனினும் இருவரும் பின்னர் பிரிந்துவிட்டனர்.
பிரபல நடிகை தபு 51 வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் இருக்கிறார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெற்றிப் படங்களில் நடித்த தபுவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை, அவர் அதைத் தவிர்க்க விரும்புகிறார். இருப்பினும், நடிகை தபு ஒருமுறை தனது சக நடிகரான நாகார்ஜுனாவுடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருவரும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் உறவை ரகசியமாக வைத்திருந்ததாக செய்திகள் வெளியானது. இருப்பினும், நாகார்ஜுனா தனது மனைவி அமலாவை விட்டு பிரிந்து வர மறுத்ததால் இந்த உறவு முடிவுக்கு வந்தது, இதன் விளைவாக தபு தனது உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தார்.
பிரபல தமிழ் நடிகை கௌதமிடுப் தனிப்பட்ட வாழ்க்கை பல்வேறு சவால் நிறைந்ததாகவே உள்ளது. அவரின் திருமண உறவு தோல்வியடைந்த பிறகு, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான கமல்ஹாசனை காதலித்தார். மேலும், கமல் - கௌதமி இருவரும் பல ஆண்டுகள் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர்.. இருப்பினும், 2016 ஆம் ஆண்டில் இருவரும் பிரிந்துவிட்டனர்.
கமல்ஹாசன் மற்றும் அவரது முன்னாள் மனைவி சரிகா ஆகியோரின் மூத்த மகள் தான் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். எனினும் ஸ்ருதிஹாசன் தனுஷுடன் இனைந்து 3 படத்தில் நடித்த போது அவருடன் காதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. அவர் தனுஷுடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுபோன்ற தகவல்களை யாரும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அதன் செய்தி தலைப்புச் செய்திகளில் வரத் தொடங்கியதால் இருவரும் தங்கள் உறவை முறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
80களில் உச்சத்தில் இருந்த நடிகை ஸ்ரீதேவி அப்போதைய காலக்கட்டத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருந்தார். ஆனால் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டார். போனி கபூர் ஏற்கனவே மோனா கபூர் என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு, அன்ஷுலா மற்றும் அர்ஜுன் என்ற பிள்ளைகள் இருந்தனர்.. இருப்பினும், மோனாவை விவாகரத்து கூட செய்யாமல், போனி மற்றும் ஸ்ரீதேவி இருவரின் உறவு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதுபோன்ற செய்திகளால் நொறுங்கிப்போன மோனா, உடனடியாக கணவரைப் பிரிந்துவிட்டார். அந்த நேரத்தில் ஸ்ரீதேவி கர்ப்பமாக இருந்ததால், விரைவில் ஒரு ரகசிய கோவில் திருமணத்தில் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டார்.