பிக் பாஸ் வீட்டுக்கு பூட்டு: இங்கு யாரும் பெரியவரில்லை: ஈஷ்வர் கண்ட்ரே விளக்கம்!
ஈஷ்வர் கண்ட்ரே பிக் பாஸ் : சுற்றுச்சூழல் சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பிக் பாஸ் சீசன் 12 நடைபெறும் ஜாலிவுட் ஸ்டுடியோவுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வனத்துறை அமைச்சர் ஈஷ்வர் கண்ட்ரே
சுற்றுச்சூழல் சட்டத்தை மீறியதால் பிக் பாஸ் சீசன் 12-ஐ மூட, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வனத்துறை அமைச்சர் ஈஷ்வர் கண்ட்ரே தனது எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளார்.
ஜாலிவுட் ஸ்டுடியோ
ராம்நகர் மாவட்டம் பிடதி அருகே உள்ள ஜாலிவுட் ஸ்டுடியோ, நீர் மற்றும் காற்று சட்டங்களின் கீழ் அனுமதி பெறாமல் செயல்படுவதால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிக் பாஸ் வீட்டுக்கு பூட்டு போட்ட அரசு; போட்டியாளர்கள் 7 மணிக்குள் வெளியேற உத்தரவு!
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கும் இந்த ஸ்டுடியோவுக்கு வாரியம் ஏற்கனவே இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் இணங்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், STP சரியாக செயல்படாதது, கழிவு மேலாண்மை முறையாக இல்லாதது, ஜெனரேட்டர்களுக்கு அனுமதி இல்லாதது தெரியவந்துள்ளது. சட்டத்தை விட யாரும் பெரியவர்கள் இல்லை. சுற்றுச்சூழல் சட்டத்தை மீறினால் நடவடிக்கை நிச்சயம் என ஈஷ்வர் கண்ட்ரே கூறியுள்ளார்.
ஜாலிவுட் பிரதான நுழைவாயிலுக்கு பூட்டு
ஜாலிவுட் பிரதான நுழைவாயில் பூட்டப்பட்டுள்ளது, போட்டியாளர்களும் ஊழியர்களும் செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்றைய எபிசோட் தயாராக உள்ளது, இன்று ஒளிபரப்பாகும். பிக் பாஸ் நிர்வாகத்தினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை பிக் பாஸ் குழு அல்லது சேனலிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை.
சூப்பர் ஹிட்டான காந்தாரா 1 படத்தை ஓடிடிக்கு பார்செல் பண்ணியாச்சு! எப்போது ஓடிடி ரிலீஸ் தெரியுமா?