MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முதன்முறையாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட தமிழ் பாடல்... அனிருத் தொடங்கிய புது டிரெண்ட்..!

முதன்முறையாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட தமிழ் பாடல்... அனிருத் தொடங்கிய புது டிரெண்ட்..!

படத்தை ரீ-ரிலீஸ் செய்வதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் முதன்முறையாக ஒரு பாடலையே ரீ-ரிலீஸ் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டாக்கி இருக்கிறார்கள். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 17 2026, 01:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anirudh Song Re Released
Image Credit : facebook

Anirudh Song Re Released

தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் டிரெண்ட் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. இதனால் தொடர்ச்சியாக பழைய படங்களை போட்டி போட்டு ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர். இது தியேட்டர்காரர்களுக்கு லாபத்தைக் கொடுத்தாலும், புதுப்படங்களை வெளியிடும் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறி இருக்கிறது. விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டால், அதற்கு அதிகப்படியான தியேட்டர்கள் ஒதுக்கப்படுகின்றன. இதனால் புதுப்படங்களுக்கு போதிய அளவில் தியேட்டர்கள் கிடைப்பதில்லை. பல படங்கள் இதன் காரணமாகவே ரிலீஸ் தேதியை தள்ளிவைக்கின்றன.

24
ரீ-ரிலீஸ் ஆன அனிருத் பாடல்
Image Credit : Facebook/ Anirudh Ravichander

ரீ-ரிலீஸ் ஆன அனிருத் பாடல்

படங்கள் ரீ-ரிலீஸ் செய்த காலம்போய் தற்போது பாடல்களை ரீ-ரிலீஸ் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த டிரெண்டை தொடங்கி வைத்துள்ளது அனிருத் தான். அவர் இசையமைப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆல்பம் பாடல் தான் ‘எனக்கென யாரும் இல்லையே’ என்கிற பாடல். அப்பாடலுக்கு விக்னேஷ் சிவன் தான் பாடல் வரிகளை எழுதி இருந்தார். அப்பாடல் அந்த சமயத்திலேயே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இது ஒரு காதல் தோல்வி பாடல் என்பதால் கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு ரீச் ஆனது.

Related Articles

Related image1
அனிருத் Underrated பாடல்கள்... ஒவ்வொன்னும் வேற ரகம் - மிஸ் பண்ணாம கேளுங்க..!
Related image2
அடேய் விடுங்கடா... கூட்டத்தில் சிக்கிய அனிருத்; அலேக்காக தூக்கிச்சென்ற பவுன்சர்கள் - வைரல் வீடியோ
34
டிரெண்டிங்கில் இடம்பிடித்த ‘எனக்கென யாரும் இல்லையே’ பாடல்
Image Credit : X

டிரெண்டிங்கில் இடம்பிடித்த ‘எனக்கென யாரும் இல்லையே’ பாடல்

இந்தப் பாடலை தான் தற்போது ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். அப்பாடலை விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த ஆண்டு காதலர் தினத்தன்று, அப்பாடலின் மியூசிக் வீடியோவை வெளியிட்டு இருந்தார்கள். பிரதீப் ரங்கநாதன் நடித்த காட்சிகள் உடன் புதுப்பொலிவோடு அப்பாடலை ரீ-ரிலீஸ் செய்திருந்தார்கள். அப்பாடல் தான் தற்போது யூடியூப்பில் டிரெண்டிங்கில் உள்ளது. அப்பாடலுக்கு மில்லியன் கணக்கில் வியூஸும் கிடைத்து வருகிறது.

44
படம் எப்போ ரிலீஸ்?
Image Credit : Facebook/ Anirudh Ravichander

படம் எப்போ ரிலீஸ்?

எனக்கென யாரும் இல்லையே பாடல் ஒருவழியாக படத்தில் இடம்பெற்றுவிட்டது என்கிற சந்தோஷத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது புரியாத புதிராக உள்ளது. கடந்த ஓராண்டுக்கு மேலாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் சில காரணங்களால் வெளியீட்டை தள்ளிவைத்து வந்தனர். இந்த ஆண்டும் காதலர் தினத்தன்று அப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திரைக்கு வரவில்லை. தற்போது மார்ச் மாதம் இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அனிருத் ரவிச்சந்தர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாட்டுப்பாடி இசைஞானியை பித்து பிடிக்க வைத்த கமல்.! கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி நின்ற இளையராஜா.!
Recommended image2
விருமாண்டியாக மாறிய சிவகார்த்திகேயன்... SK-வின் பிறந்தநாள் பரிசாக வந்த சேயோன் கிளிம்ப்ஸ்
Recommended image3
குணசேகரனின் பிளானில் மறைந்திருக்கும் மர்மம்... போலீசில் புகார் அளிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது
Related Stories
Recommended image1
அனிருத் Underrated பாடல்கள்... ஒவ்வொன்னும் வேற ரகம் - மிஸ் பண்ணாம கேளுங்க..!
Recommended image2
அடேய் விடுங்கடா... கூட்டத்தில் சிக்கிய அனிருத்; அலேக்காக தூக்கிச்சென்ற பவுன்சர்கள் - வைரல் வீடியோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved