மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் முதல்முறையாக புகைப்படம் வெளியிட்ட விமல்..! கொள்ளை அழகு...
பிரபல நடிகர் விமல், முதல் முறையாக தன்னுடைய ஒரு வயது மகள் உட்பட, மூன்று குழந்தைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி, பல்வேறு போராட்டங்களை கடந்து கதாநாயகன் என்கிற இடத்தை பிடித்துள்ளவர் விமல். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய முதல் திரைப்படமான ’பசங்க’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கிராமத்து கதையம்சம் கொண்ட, 'களவாணி'. சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இதை தொடர்ந்து தூங்காநகரம், கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து, தமிழ் சினிமாவில் நிலையான கதாநாயகனாவும் இடம் பிடித்துவிட்டார். அதே போல் 'மன்னர் வகையறா' என்கிற படத்தை தயாரித்து, அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு, தன்னுடைய மாமன் மகள் அக்ஷயா என்கிற மருத்துவரை விமல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அக்ஷயா பெற்றோருக்கு விருப்பம் இல்லாமல் இந்த திருமணம் நடந்ததால், கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் மிகவும் ரகசியமாக நடந்தது.
தற்போது இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு வயது பெண் குழந்தை உள்ள நிலையில், விமலின் மகள் ஆத்விகாவுக்கு நேற்று முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இதையடுத்து தன்னுடைய மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் விமல் புகைப்படம் வெளியிட்டுள்ளார். குறிப்பாக முதல் முறையாக மகளை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை விமல் மகள் ஆத்விகாவுக்கு தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் விமல் தற்போது ’சண்டக்காரி’ ’எங்க பாட்டன் சொத்து’ ’மஞ்சள் குடை’ ’குல சாமி’ படவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படங்கள் ஒவ்வொன்றாக ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .