ஏன் சித்து இப்படியொரு முடிவெடுத்த?... சித்ராவின் மறைவால் துடிதுடிக்கும் திரைப்பிரபலங்கள்...!
First Published Dec 9, 2020, 5:51 PM IST
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை விஜே சித்ராவின் தற்கொலை செய்தியில் அவருடைய ரசிகர்கள் மீளாத நிலையில், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் பலரும் தங்களது வருத்தத்தையும், இரங்கலையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

நடிகை சித்ராவின் மரணம் அதிர்ச்சி, வருத்தமளிக்கிறது. நம்பிக்கைகுரிய, திறமையான நடிகை நம்மை விட்டு விரைவில் சென்றுவிட்டார். தற்கொலை என்பது பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வல்ல என்பதை மக்கள் உணர வேண்டும், ஒரு சமூகமாக, இந்த உண்மையை முன்பை விட வலுவாக வலியுறுத்த வேண்டும்! என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி இதயத்தை உடைக்கும் பேரதிர்ச்சி. இது எல்லாம் வெறும் பொய் என்று சொல்லும் படியான ஒரு போன் காலை அவளிடம் இருந்து நான் இன்னும் எதிர்பார்க்கிறேன். ஏன், ஏன், ஏன் என் தோழியே ஏன்?.... நீ ஒரு தேவதை பேபி என பிக்பாஸ் புகழ் அபிராமி சோகத்தை பகிர்ந்துள்ளார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?