- Home
- Cinema
- "எப்போதும் அவர் மட்டுமே சூப்பர் ஸ்டார்".. ஆணித்தரமாக சொன்ன தளபதி விஜய் - ஒரு சின்ன Flash Back!
"எப்போதும் அவர் மட்டுமே சூப்பர் ஸ்டார்".. ஆணித்தரமாக சொன்ன தளபதி விஜய் - ஒரு சின்ன Flash Back!
கடந்த சில வாரங்களாகவே சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் இடையேயும், தளபதி விஜய் அவர்களுடைய ரசிகர்கள் இடையேயும் ஒரு விதமான மோதல் போக்கு ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.சூப்பர் ஸ்டார் பட்டம் அடுத்தபடியாக தளபதி விஜய் அவர்களை தான் சேரும் என்று அவருடைய ரசிகர்கள் பலரும் கூறிவரும் நிலையில், உண்மையில் தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது கொண்டிருக்கும் அபிமானம் என்ன என்பதை அவரே பல இடங்களில், பல மேடைகளில், ஆயிரக்கணக்கான மக்கள் முன்பு கூறியிருக்கிறார். அந்த நிகழ்வுகளின் ஒரு கோர்வை தான் இந்த பதிவு.

கடந்த 2005ம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்பட விழாவில் பேசிய நடிகர் விஜய், சூப்பர் ஸ்டார் என்பது அவர் ஒருவர்தான். இந்த சந்திரமுகி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டது நான்தான் என்றும் கூறினார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் முன்பே கூறியதைப் போல அவர் யானை அல்ல, விழுந்தவுடன் எழுந்து நிற்க சிரமப்படுவதற்கு, அவர் ஒரு குதிரை என்று கூறி அவருக்கு புகழாரம் சூட்டினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பொழுது அங்கு குழுமி இருந்த அவருடைய ரசிகர்கள், நீங்கள் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறினார். அதற்கு பதில் அளித்து பேசிய நடிகர் விஜய், எல்லா துறையிலும் நம்பர் ஒன் ஸ்டார் என்ற அந்தஸ்து இருக்கிறது. அந்த இடத்தை அடைவதற்கு அனைவரும் உழைத்து வருகிறார்கள். நானும் உழைத்துக் கொண்டு இருக்கிறேன், ஆனால் எப்பொழுதுமே சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக நான் ஆசைப்பட்டதில்லை, அவர் ஒருவர் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்று அவர் பதில் அளித்தார்.
அதேபோல மீண்டும் ஒருமுறை ரசிகர்களை சந்தித்து அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பொழுது, நீங்கள் தான் நிச்சயமாக அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவர் ரசிகர்கள் கூறியபோது, அவர் சிரித்துக் கொண்டே, எப்பொழுதும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் அவர்கள் மட்டுமே என்று அழுத்தமாக கூறிய விஜயை, அவருடைய ரசிகர்களால் இன்னும் அதிகம் நேசிக்க வைத்தது.
கத்தி திரைப்படத்திற்காக விஜய்க்கு ஒரு விருது வழங்கப்பட்டது, அந்த விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் ஒருவர் அவரிடம் நீங்கள் தளபதியாக இருக்க விரும்புகிறீர்களா? அல்லது அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக இருக்க விரும்புகிறீர்களா? என்று கேட்ட பொழுது, எனக்கு தளபதி என்ற பட்டமே போதுமானது, சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அவர் ஒருவரை மட்டுமே சாரும் என்று பதில் அளித்து அரங்கையே அதிர வைத்தார்.
ஏறத்தாழ 50 ஆண்டுகளாக தமிழ் திரை உலகை தனது நடிப்பினால் கட்டிப்போட்டு உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு, அவரும் ஒரு மாபெரும் ரசிகர் என்பதை பலமுறை நிரூபித்தவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பதான நடிக்க வந்திருக்காங்க... அதுக்குள்ள கல்யாணமா? மகள் அதிதிக்கு ஷங்கர் போட்ட கண்டிஷன்