இப்பதான நடிக்க வந்திருக்காங்க... அதுக்குள்ள கல்யாணமா? மகள் அதிதிக்கு ஷங்கர் போட்ட கண்டிஷன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான அதிதிக்கு திருமணம் செய்து வைக்கும் முடிவில் உள்ள ஷங்கர், அவருக்கு கண்டிஷன் ஒன்றையும் போட்டுள்ளாராம்.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருபவர் ஷங்கர். இவருக்கு இப்படி ஒரு வாரிசா என பலரும் ஆச்சர்யத்துடன் கேட்ட ஒருவர் தான் அதிதி. பெரிய இடத்து பெண் என அலட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் கேஷுவலாக பழகும் குணம் கொண்ட அதிதி, மிகவும் துறுதுறுவென குறும்பு பெண்ணாகவும் இருந்து வருகிறார். அவர் செய்த சேட்டைகள் எல்லாம் விருமன் மற்றும் மாவீரன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலேயே அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் அதிதி, சினிமாவில் காலடி எடுத்து வைத்ததும், அவரது தந்தை ஷங்கர் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா, ஆசைக்கு ரெண்டு படம் நடிச்சிக்கோ என்பது தானாம். ஆனால் அதிதியோ அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்துக் காட்டியதும், ஷங்கர் மற்றுமொரு ஸ்டிரிக்ட் ஆன கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம்.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக... இந்த சீசனில் ஒன்னில்ல 2 வீடு - ஆனா அதுல ஒரு டுவிஸ்ட் இருக்கு!
அது என்னவென்றால், அதிதிக்கு இரண்டு வருஷம் டைம் கொடுத்திருக்கிறாராம் ஷங்கர். அந்த இரண்டு வருடத்திற்குள் எத்தனை படங்கள் நடிக்க முடியுமோ, நடிச்சிக்கோ, ஆனா இரண்டு ஆண்டுகளுக்கு பின் நிச்சயம் திருமணம் என கட் அண்ட் ரைட் ஆக சொல்லி இருக்கிறா ஷங்கர். அப்பாவின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத அதிதி தற்போது செம்ம பிசியாக நடிக்க கிளம்பிவிட்டார். அவர் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
அப்படத்தில் நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தான் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாட்டில் நடந்து வருகிறது. இது முடிந்த கையோடு ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்க உள்ள புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம் அதிதி. இப்படத்தில் அவர் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். 2 ஆண்டுகளுக்குள் நிறைய படங்களில் நடித்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் உள்ளாராம் அதிதி.
இதையும் படியுங்கள்... 14 வயசில் திருமணம்.. 2 வருடத்தில் முடிவுக்கு வந்த வாழ்க்கை! அங்காடி தெரு சிந்துவுக்கு இவ்வளவு கஷ்டங்களா?