எழுதியது ஒரே ஒரு தமிழ் பாட்டு; ஆனால் 50 ஆண்டுகளாக அழியா புகழோடு நிலைத்திருக்கும் பாடலாசிரியர்!
Female Lyricist : தமிழ் திரையுலகை பொருத்தவரை பெண் பாடல் ஆசிரியர்களுடைய எண்ணிக்கை என்பது ஆரம்பத்தில் இருந்தே மிகவும் குறைவாக இருந்து வருகிறது என்பது பலருக்கும் வருத்தம் அளிக்கும் ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது.
Female Lyricist
தமிழ் திரையுலகை பொருத்தவரை பாடல்கள் என்று வரும் பொழுது இசையமைப்பாளர்களுக்கு இணையாக போற்றப்படும் திரை கலைஞர்கள் தான் பாடல் ஆசிரியர்கள். இசை ஒரு பாடலை எவ்வளவு தூரம் தூக்கிப் பிடித்தாலும், அதற்கான எழுத்துக்கள் மிக அழகாக இருந்தால் தான் அந்த பாடல் மெகா ஹிட் ஆக மாறும். அந்த வகையில் கண்ணதாசன் தொடங்கி, இன்று மதன் கார்க்கி வரை தமிழ் சினிமாவில் பல்வேறு பாடலாசிரியர்கள் தங்களுடைய மிகச்சிறந்த திறமையால் மிளிரி வருகின்றனர் என்றே கூறலாம். ஆனால் தமிழ் திரையுலக வரலாற்றில் பெண் பாடல் ஆசிரியர்களுடைய எண்ணிக்கை ஆரம்ப காலத்தில் இருந்தே குறைவாகத் தான் இருக்கிறது.
கமலின் மெகா ஹிட் படத்திற்கு "நோ" சொன்ன இளையராஜா - கடைசியில் நடந்த எதிர்பாரா ட்விஸ்ட்!
madhan karky
இன்றைய கால தமிழ் சினிமாவில் தாமரை, பார்வதி, கீர்த்தி நெல்சன், குட்டி ரேவதி, ஆண்ட்ரியா மற்றும் ஸ்ருதிஹாசன் போன்ற மிக குறைவிலான பெண் கலைஞர்கள் மட்டுமே பாடல்களை எழுதி வருகின்றனர். இன்னும் தமிழ் சினிமா அதிக அளவிலான பெண் பாடல் ஆசிரியர்களை வரவேற்க தயாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சுமார் 56 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண் பாடல் ஆசிரியர் தமிழ் திரையுலகில் ஒரே ஒரு பாடலை எழுதி இன்றளவும் புகழோடு வளம் வந்து கொண்டிருக்கிறார் என்று கூறினால் அது சற்றும் மிகையல்ல. அந்த பாடல் ஆசிரியர் யார்? அவர் எழுதிய பாடல் என்ன? அந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் எது? என்று அனைத்தையும் இந்த பதிவில் காணலாம்.
Kudiyiruntha kovil
சுமார் 56 ஆண்டுகளுக்கு முன்பாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், நடிகை ஜெயலலிதா, எம்.என் நம்பியார், நாகேஷ், ராஜஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்து, இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் "குடியிருந்த கோவில்". இந்த திரைப்படத்திற்கு இசையமைத்தது விஸ்வநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் இடம் பெற்றிருக்கும், அவை எல்லாமே சூப்பர் ஹிட். இந்த படமும் மெகாஹிட்டான படம். இப்படத்தில் வந்த எட்டு பாடல்களில் வாலிபக் கவிஞர் வாலி நான்கு பாடல்களுக்கு பாடல் ஆசிரியராக பணியாற்றினார். ஆலங்குடி சோமு மற்றும் புலமைப்பித்தன் ஆகிய இருவரும் இரண்டு பாடல்களை எழுத ரோஷனாரா பேகம் என்பவர் ஒரு பாடலை இந்த திரைப்படத்தில் எழுதியிருந்தார். கோவையை சேர்ந்த பேகத்தின் தந்தை முஸ்தபாவும், மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதனும் நெருங்கிய நண்பர்களாம். இந்த சூழலில் தான் பேகத்தை தன்னுடைய திரைப்படத்தில் பாடல் ஒன்று எழுத அழைத்திருக்கிறார் விஸ்வநாதன்.
Kudiyiruntha kovil movie
குடியிருந்த கோவில் படத்தில் பாடல் பதிவின்போது எம்.எஸ்.வி குறிப்பிட்ட அந்த பாடலுக்கான மெட்டை கூறியதும் "குங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சம் இரண்டின் சங்கமம்" என்று வரிகளை பேகம் கூற, அங்கிருந்த படக்குழுவினர் அனைவருக்கும் வெகுவாக அவரை பாராட்டினார்களாம். பேகம் எழுதிய ஒரே பாடல் அது தான். தமிழ் சினிமாவில் ஒரு இஸ்லாமிய பெண் பாடல் எழுதியதும் அதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 56 ஆண்டுகள் கழித்தும் கிராமப்புறங்களில் இன்றும் திருமண நிகழ்வுகளில் இந்த பாடல் தான் ஒலிக்கிறது என்பதே அவர் வரிகளுக்கு கிடைத்த பரிசு.
ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து; அட்வைஸ் கொடுத்தாரா தனுஷ் பட நடிகை?