- Home
- Cinema
- முட்டை கட்டுறதுல ஐயா எக்ஸ்பெர்ட்; 6 முட்டையை கட்ட தெரியாம கீழ போட்டு ஒடச்ச மாமனார்: Pandian Stores 2!
முட்டை கட்டுறதுல ஐயா எக்ஸ்பெர்ட்; 6 முட்டையை கட்ட தெரியாம கீழ போட்டு ஒடச்ச மாமனார்: Pandian Stores 2!
Father In Law with Egg In Pandian Stores 2 :பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒரு 6 முட்டையை எப்படி கட்ட வேண்டும் என்பது கூட தெரியாமல் மாமனார் கீழே போட்டு உடைக்க, சரவணன் கோபத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன் மற்றும் பழனிவேலுவிற்கு துணையாக சரவணன் தான் கடையை பார்த்துக் கொள்கிறார். இப்படி இருக்கும் போது தங்கமயிலின் அப்பா அதான் சரவணனின் மாமனார் மாணிக்கம் பாண்டியன் டிராவல்ஸில் வேலை கேட்க, பாண்டியன் நம்ம கடைக்கு வந்து வேலை பாருங்க என்று சொல்ல மாணிக்கமும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு வேலைக்கு வந்தார்.
முட்டையை உடைத்த மாமனார்
வந்த முதல் நாளே கல்லாவில் உட்கார்ந்து ரூ.500 ஆட்டைய போட்டுவிட்டார். கூல்டிரிங்ஸ், வேர்க்கடலை என்று ஒன்னுவிடாமல் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கடைசியில் வீட்டிற்கு கிளம்பும் போது கடையிலிருந்து ஒரு மாசத்திற்கு தேவையான மளிகை சாமான்களையும் எடுத்துக் கொண்டு சென்றார். இதை பற்றி தங்கமயிலிடம் பேச இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
கடைக்கு வேலைக்கு வந்த தங்கமயில்
கடைசியில் தங்கமயில் மாமனார் பாண்டியனிடம் கேட்டு கடைக்கு வேலைக்கு வந்தார். அவரும் வந்ததும் கல்லாவில் உட்கார்ந்தார். கடையில் பாண்டியன் இருக்கும் போது தங்கமயிலோ அல்லத் மாணிக்கமோ யாரும் கல்லாவில் உட்காருவதில்லை. இதனால் வேலை செய்வது போன்று ஆக்டிங் செய்த மாணிக்கம் மகள் முட்டையை கட்டிக் கொண்டிருக்கும் போது அதனை வாங்கி தான் கட்டுவதாக கூறி 4 முட்டையை கீழே போட்டு உடைத்துள்ளார்.
சூப்பர் ஹிட்டான காந்தாரா 1 படத்தை ஓடிடிக்கு பார்செல் பண்ணியாச்சு! எப்போது ஓடிடி ரிலீஸ் தெரியுமா?
முட்டை கேட்ட வாடிக்கையாளர்
ஏற்கனவே கடைக்கு வந்த வாடிக்கையாளர் முட்டை கேட்க, அதனை பழனிவேல் தான் முதலில் எடுத்துக் கொடுப்பதாக இருந்தது. ஆனால், சும்மா இருக்காமல் தங்கமயில் தான் முட்டையை கட்டிக் கொடுப்பதாக கூறி நியூஸ்பேப்பரில் 6 முட்டையை எடுத்து வைத்து பொட்டலம் போடுவது போன்று கட்ட முயற்சிக்க மாணிக்கம், அதனை வாங்கி கீழே போட்டு உடைத்துள்ளார்.
சரவணன் மற்றும் பழனிவேல்
இதைப் பார்த்த சரவணன் மற்றும் பழனிவேல் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அதற்கு முன்னதாக இப்படியெல்லாம் நடக்குன்னு தெரிஞ்சுதான் பழனிவேல் முதலிலேயே எங்கிட்டு கொடுங்கள். நான் கட்டிக் கொள்கிறேன் என்று கேட்டார். ஆனால், அவர் தரவில்லை. அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் முடிந்தது.
பிக்பாஸ் சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ்மேட்ஸூக்கு கொடுக்கப்பட்ட பிரீடம்; இனிமே வேக்கப் சாங் கிடையாது!