- Home
- Cinema
- உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலயா... மலையாளத்தில் எண்ட்ரி கொடுத்த தமன்னாவை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்
உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலயா... மலையாளத்தில் எண்ட்ரி கொடுத்த தமன்னாவை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்
Tamannaah : தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் மட்டுமே நடித்து வந்த தமன்னா, தற்போது முதன்முறையாக மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. தமிழில் கடந்த 2006-ம் ஆண்டு ரிலீசான கேடி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தமன்னா. இதையடுத்து கல்லூரி, நேற்று இன்று நாளை போன்ற படங்களில் மிகவும் சாதுவான ஹீரோயினாக நடித்து வந்த தமன்னா, தனுஷின் படிக்காதவன் படம் மூலம் கிளாமர் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார்.
கிளாமர் ரூட் ஒர்க் அவுட் ஆனதால், இவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அதன்படி சூர்யா, விஜய், சிம்பு, ஜெயம் ரவி, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து நடித்து பாப்புலர் ஆனார் தமன்னா. பாகுபலி படத்துக்கு பின் இவர் தெலுங்கு திரையுலகில் பிசியானதால் இவருக்கு தமிழில் மவுசு குறைந்தது.
இதனால் கோலிவுட்டில் இவருக்கு பட வாய்ப்புகளும் சரிவர கிடைக்கவில்லை. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத தமன்னா, தெலுங்கு படங்களே போதும் என்கிற முனைப்போடு அங்கு மட்டும் நடித்து வந்தார். தற்போது இவர்கைவசம் தெலுங்கில் மூன்று படங்களும், இந்தியில் மூன்று படங்களும் உள்ளன. தமிழில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... நான் எப்போதுமே மோடி ஆதரவாளர் தான்... அதுக்கு ஒரு காரணம் இருக்கு - ஓப்பனாக பேசிய சமந்தா.. வைரலாகும் வீடியோ
இதுவரை தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்த தமன்னா, மலையாளத்தில் மட்டும் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், தற்போது முதன்முறையாக மலையாள படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். அருண் கோபி இயக்கத்தில் உருவாகும் திலீப்பின் 147-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் தமன்னா. இப்படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் அண்மையில் தொடங்கியது.
இந்நிலையில், திலீப்புடன் தமன்னா நடிப்பதை அறிந்த ரசிகர்கள் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர். நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் திலீப். அவருடன் எப்படி நடிக்க சம்மதித்தீர்கள், உங்களுக்கு வேற ஆள கிடைக்கலயா என தமன்னாவை திட்டித்தீர்த்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ராமராஜன் - நளினி விவாகரத்துக்கு விக்ரம் பட நடிகை தான் காரணமா?