பிரபல நடிகர் திடீர் மரணம்... அடுத்தடுத்த இழப்புகளால் சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!
கொரோனா 2வது அலையால் ஏற்படும் பாதிப்புகள் போதாது என்று, அடுத்தடுத்து திரையுலகினர் பலரும் மரணமடையும் சம்பவம் கோலிவுட்டையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா 2வது அலையால் ஏற்படும் பாதிப்புகள் போதாது என்று, அடுத்தடுத்து திரையுலகினர் பலரும் மரணமடையும் சம்பவம் கோலிவுட்டையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக காமெடி நடிகர்கள் அடுத்தடுத்து மரணிப்பது ரசிகர்களை மனதில் கனத்தைக் கூட்டியுள்ளது.
கோலிவுட்டைப் பொறுத்தவரை காமெடி நடிகர்களான விவேக், மாறன், நெல்லை சிவா, பவுன்ராஜ், பாண்டு, இயக்குநர்கள் தாமிரா, கே.வி.ஆனந்த் என அடுத்தடுத்த மரணங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது
வெள்ளித்திரையைப் போலவே சின்னத்திரையிலும் கலைஞர்களின் திடீர் மரணம் கலங்க வைத்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி சீரியல் நடிகர் குட்டி ரமேஷ், பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கடேஷ் ஆகியோர் அடுத்தடுத்து மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
தற்போது பல படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ள கலைமாமணி அமரசிகாமணி காலமானார். இவருடைய மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இவருடைய மறைவுக்கு வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.