கொரோனா பரிசோதனையால் கன்னித்தன்மையை இழந்தேன்... நடிகையின் பகீர் ட்வீட்..!
கொரோனா பரிசோதனை குறித்து பிரபல நடிகை வெளியிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
இந்தி படங்கள் மற்றும் வெப் சீரிஸ் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் குப்ரா சேட், டிவி. நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் சமீபத்தில் தனக்கு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
அந்த அனுபவம் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காமெடியாக பதிவிட்டுள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அந்த ட்வீட்டில் கொரோனா பரிசோதனை மூலமாக எனது கன்னித் தன்மையை இழந்தேன். நான் நினைத்தது போது அது ஒன்றும் அவ்வளவு மோசமாக இல்லை. விரைவில் முடிந்துவிட்டது. எனது சில முன்னாள் காதலர்களை நினைவூட்டியது. பரிசோதனையின் போது தும்மினேன் என பதிவிட்டுள்ளார்.
இதன் அர்த்தத்தை புரிந்து கொண்ட பலரும் ஸ்மைல் இமோஜிக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதற்கான காரணம் குறித்து தெரிவித்துள்ள குப்ரா, தனக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என்றும், பல் தொடர்பான சர்ஜரி மேற்கொள்ள உள்ளதால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.