அட்றா சக்க... அட்றா சக்க... பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில இந்த காமெடி பிரபலமா? அப்போ கலகலப்புக்கு பஞ்சம் இல்லை
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில்... இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் பற்றிய விவரங்கள் ஒன்றின்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது, பிரபல டிவி காமெடி பிரபலமும், நடிகருமான ஒருவர் கலந்து கொள்ள உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நான்கு சீசன்களுக்கு இருந்ததை விட, 5 ஆவது சீசனுக்கான புரோமோக்கள் வேற லெவலுக்கு இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியுடன் போட்டி போடும் விதமாக, மற்ற சில தொலைக்காட்சிகளில் புது புது நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி உள்ளதால் இந்த முறை டி.ஆர்.பி-யை பிடிக்க கடும் போட்டி நிலவும் என எதிர்பாக்கப்படுகிறது.
அடுத்தமாதம் முதல் வாரத்தில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களை பிக்பாஸ் குழுவினர் ரகசியமாக தேர்வு செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வப்போது சில போட்டியாளர்கள் குறித்த தகவல் அரசால் புரசலாக வெளியானாலும், இதுவரை... ஒருவர் கூட தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதை உறுதி செய்யவில்லை. அதற்க்கு முக்கிய காரணம், யார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்களோ அவர்கள் அதனை வெளிப்படுத்த கூடாது என்கிற நிபந்தனை உண்டு. அதனை மீறும் பட்சத்தில் அவர்களை நிகழ்ச்சியில் இருந்து நீக்கும் உரிமை தயாரிப்பு நிறுவனத்திற்கு உண்டு.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டது மட்டும் இன்றி, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளது.
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில், விஜய் டிவி ப்ரியங்கா, குக் வித் கோமாளி கனி, ஷகிலா மகள் மிளா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது... பிக்பாஸ் நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இந்த முறை கான்ரவெர்சிக்கு பஞ்சம் இருக்குமே தவிர, காமெடிக்கு பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது. இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்படி பட்ட பட்டாசுகள் எப்படி வெடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.