MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Ever Green Deva: தேவா பாடல்கள் இல்லாமல் கச்சேரிகளே கிடையாதா? மேடை கலைஞர்கள் சொல்லும் சீக்ரெட்!

Ever Green Deva: தேவா பாடல்கள் இல்லாமல் கச்சேரிகளே கிடையாதா? மேடை கலைஞர்கள் சொல்லும் சீக்ரெட்!

இசை அமைப்பாளர் தேவா, 'தேனிசைத் தென்றல்' எனப் போற்றப்படுகிறார். கடந்த 40 ஆண்டுகளாக மேடை கச்சேரிகளின் முடிசூடா மன்னனாகத் திகழ்வதோடு, ரஜினி முதல் விஜய், அஜித் வரை பலரின் வெற்றிக்கு அவரது இசை முக்கிய காரணமாக அமைந்தது. 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 03 2026, 06:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தேனிசை தென்றல் தேவா.!
Image Credit : our own

தேனிசை தென்றல் தேவா.!

தமிழ்நாட்டின் எந்த மூலைக்குச் சென்றாலும், ஒரு திருவிழாவோ அல்லது ஊர் கச்சேரியோ நடந்தால், அங்கு ஒலிபெருக்கிகளில் முதலில் அதிரும் குரல் 'தேனிசைத் தென்றல்' தேவாவினுடையதாகத்தான் இருக்கும். இசை அமைப்பாளர்கள் பலர் வரலாம், போகலாம். ஆனால், மேடை இசை என்று வந்துவிட்டால் இன்றும் தேவாவே 'அன்-கிரவுண்ட்' சக்கரவர்த்தியாகத் திகழ்கிறார்.

25
மேடை கலைஞர்களின் 'காட்பாதர்' ஏன் தேவா?
Image Credit : our own

மேடை கலைஞர்களின் 'காட்பாதர்' ஏன் தேவா?

"தேவா பாடல்கள் இல்லாமல் கச்சேரிகளே கிடையாது" - இது ஏதோ மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை அல்ல, கடந்த 40 ஆண்டுகளாக மேடை கச்சேரிகளை நடத்தி வரும் போன்ற கலைஞர்கள் சொல்லும் எதார்த்தமான உண்மை. தேவா கடவுள் போன்றவர்," என்கின்றனர் மேடை இசைக் கலைஞர்கள். ஒரு மேடை கச்சேரி சராசரியாக 3 மணி நேரம் நடக்கிறது என்றால், அதில் குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது தேவாவின் பாடல்கள்தான் ஆக்கிரமிக்கின்றன. இதற்குப் பின்னால் இருக்கும் 'சீக்ரெட்' என்ன?

ஆடியன்ஸின் நாடித் துடிப்பு

தேவாவின் பாடல்கள் அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவரையும் ஆட வைக்கும் ரகம்.

பல்வேறு ரகங்கள்

அவரிடம் மெலடி இருக்கிறது, தத்துவம் இருக்கிறது, முரட்டுத்தனமான கானா இருக்கிறது, எல்லாவற்றிற்கும் மேலாக கிராமத்து மண்ணின் வாசனை வீசும் நாட்டுப்புற இசை இருக்கிறது.

பாடகர்களின் களம்

எஸ்.பி.பி, சித்ரா, ஜானகி போன்ற ஜாம்பவான்கள் முதல் பல இளம் கலைஞர்களுக்கு தேவா ஒரு பெரிய மேடையை அமைத்துக் கொடுத்தார்.

Related Articles

Related image1
Music: வசீகர குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட கமல்ஹாசன்.! அஜித் குமாருக்காக அவர் பாடிய பாடல் எது தெரியுமா?
Related image2
Deva Music: சினிமா ரசிகர்களே அலர்ட்! நீங்கள் ரகுமான் என்று கொண்டாடிய அந்தப் பாடல்கள் தேவாவுடையது!
35
ரஜினி முதல் விஜய்-அஜித் வரை : வெற்றிக் கூட்டணி!
Image Credit : our own

ரஜினி முதல் விஜய்-அஜித் வரை : வெற்றிக் கூட்டணி!

90-களின் தொடக்கத்தில் ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு மாஸ் ஹிட் கொடுத்தது மட்டுமின்றி, இன்றைய சூப்பர் ஸ்டார்களான விஜய் மற்றும் அஜித்தின் ஆரம்பகால கரியரைத் தூக்கி நிறுத்திய பெருமை தேவாவையே சாரும்.

அண்ணாமலை

"வெற்றி நிச்சயம்" பாடல் இன்றும் ஒரு மோட்டிவேஷன் அந்தம் (Anthem).

காதல் கோட்டை

அஜித் - தேவையானிக்கு மட்டுமல்ல, தேவாவின் கரியரிலும் இது ஒரு மைல்கல். 'கவலைப்படாதே சகோதரா' பாடல் இன்றும் மேடைகளில் ஆறுதல் சொல்லும் கீதம்.

மின்சார கண்ணா

விஜய் - ஹரிஹரன் கூட்டணியில் 'உன் பேர் சொல்ல ஆசை தான்' இன்றும் இளசுகளின் மெலடி சாய்ஸ்.

45
90s கிட்ஸ் வைப்... 2k கிட்ஸ் ட்ரெண்ட்!
Image Credit : our own

90s கிட்ஸ் வைப்... 2k கிட்ஸ் ட்ரெண்ட்!

தேவாவின் பாடல்கள் எப்போதுமே காலாவதியாவதில்லை. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் 'பஞ்சு மிட்டாய் சேலை கட்டி' மற்றும் 'கரு கரு கருப்பாயி'. பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த இந்தப் பாடல்கள், இன்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும், 'லியோ' போன்ற பிரம்மாண்ட படங்களிலும் இடம்பெற்று மீண்டும் வைரலாகி வருகின்றன. அதேபோல், 'கட்டபொம்மன்' படத்தின் 'பிரியா பிரியா', 'மகாபிரபு' படத்தின் 'சொல்லவா சொல்லவா' போன்ற பாடல்கள் கச்சேரிகளில் மட்டுமல்ல, இன்றும் பேருந்து பயணங்களின் ஃபேவரைட் பிளேலிஸ்ட்.

55
அந்த 'மேஜிக்' சீக்ரெட்!
Image Credit : our own

அந்த 'மேஜிக்' சீக்ரெட்!

மேடை கலைஞர்கள் சொல்லும் அந்த ரகசியம்இதுதான்

 “தேவாவின் இசை எளிமையானது, ஆனால் வலிமையானது. ஒரு பாடலைக் கேட்டவுடனேயே அது மக்களின் மனதில் அமர்ந்துவிடும். அவரது பாடல்களில் இருக்கும் அந்தத் துள்ளலும், வரிகளில் இருக்கும் தெளிவும் ஒரு சாதாரண பாடகரைக்கூட மேடையில் ஹீரோவாக மாற்றும்.” சினிமா உலகில் எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும், 'தேனிசைத் தென்றல்' தேவாவின் பாடல்கள் இன்றும் மேடைகளில் அனலாகத் தகித்து கொண்டேதான் இருக்கின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
சினிமா
திரைப்பட விமர்சனம்
விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சொந்தப் பிள்ளைகளையே கவனிக்காத நீங்க..!" - விஜய்யை வம்புக்கு இழுக்கிறாரா பிரசாந்த் ரங்கசாமி?
Recommended image2
31 கோடியில் 4BHK! நயன்தாரா - விக்னேஷ் சிவனின் கனவு இல்லம் ரெடி! போயஸ் கார்டனில் குடியேறும் தம்பதி?
Recommended image3
அம்மாடியோவ், அழகு பொம்மாயி த்ரிஷாவின் அந்த ஒரு பதிவு! விஜயின் விவாகரத்து வதந்திக்கு மீண்டும் உயிர் கொடுத்த 'Go to People' வாசகம்!
Related Stories
Recommended image1
Music: வசீகர குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட கமல்ஹாசன்.! அஜித் குமாருக்காக அவர் பாடிய பாடல் எது தெரியுமா?
Recommended image2
Deva Music: சினிமா ரசிகர்களே அலர்ட்! நீங்கள் ரகுமான் என்று கொண்டாடிய அந்தப் பாடல்கள் தேவாவுடையது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved