பாக்ஸ் ஆபிஸில் மோசமான சாதனை படைத்த காந்தா- OTTக்கு பார்சல் கட்டப்பட்ட பரிதாபம்!
Kaantha Box Office Collection and OTT Release Date : துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்சே நடித்த 'காந்தா' திரைப்படம் திரையரங்குகளில் சரியாக ஓடவில்லை. தற்போது OTT-க்கு வரவுள்ளது. சமீபத்தில் OTT வெளியீட்டு தேதி உறுதியானதாக தகவல்.

துல்கர் சல்மான், காந்தா
மலையாள நடிகர் துல்கர் சல்மான் இப்போது பான்-இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார். சமீபத்தில் 'காந்தா' படம் ரசிகர்களை சந்தித்தார். இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்சே கதாநாயகியாகவும், ராணா, சமுத்திரக்கனி முக்கிய ரோலில் நடித்தனர்.
ஈகோ மோதலை மையமாகக் கொண்ட படம்
1950-களின் பின்னணியில், ஒரு ஹீரோவுக்கும் இயக்குநருக்கும் இடையிலான ஈகோ மோதலை மையமாகக் கொண்ட இப்படம், விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டாலும், வசூல் ரீதியாக பெரும் தோல்வியைச் சந்தித்தது.
துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ
துல்கர் சல்மான், பாக்யஸ்ரீயின் நடிப்பு பாராட்டப்பட்டது. படம் ரூ.20 கோடி வசூலித்து, 40-50% மட்டுமே முதலீட்டை மீட்டெடுத்ததால் தோல்வியடைந்தது. இப்போது OTT-யில் வெளியாகிறது.
‘காந்தா’ படத்தின் OTT உரிமை
‘காந்தா’ படத்தின் OTT உரிமையை நெட்ஃபிளிக்ஸ் பெற்றுள்ளது. இப்படம் டிசம்பர் 12 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் தோல்வியடைந்த இப்படம் OTT-யில் வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காந்தா வெளியாகி 6 நாட்கள் கடந்த நிலையில் ரூ.20 கோடி வரையில் வசூல் குவித்திருப்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது. உலகளவில் மொத்தமாக ரூ.30 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.