7 ஆண்டுகளில் 7 முறை உருவான படம்; ஒவ்வொரு முறையுமே சூப்பர் ஹிட் தான்! வெளிநாட்டிலும் ரீமேக்!
பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம் 7 ஆண்டுகளில் 7 முறை வெவ்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 75 கோடி வசூலித்த இந்த படம், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரீமேக் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.
Drishyam
ஒவ்வொரு ஆண்டும் எத்தனையோ படங்கள் வருகின்றன. ஆனால் சில படங்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுகின்றன. இதுபோன்ற படங்களின் அடுத்த பாகம் அல்லது வேறு மொழிகளில் ரீமேக் செய்வது என்பது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் இந்த குறிப்பிட்ட படம் 7 ஆண்டுகளில் 7 முறை உருவானது. இந்த படம் வெளியான ஒவ்வொரு முறையும், அது பிளாக்பஸ்டராக மாறியது. அது எந்த படம் தெரியுமா?
Drishyam
இப்படம் தென்னிந்திய சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும் மேலு பாக்ஸ் ஆபிஸில் பெரும் லாபத்தை ஈட்டியது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் 75 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. அது வேறு எதுவும் இல்லை இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரீமேக் செய்யப்பட்ட த்ரிஷ்யம் படம் தான்.
Drishyam
2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் தான் த்ரிஷ்யம். இந்த படத்தில் மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், ஆஷா சரத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு விமர்சன ரீதியாக பரவலாக நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் திரையரங்குகளில் 150 நாட்களுக்கு மேல் ஓடியது. அதிக வசூல் செய்த மலையாள படங்களில் ஒன்றாகவும் மாறியது.
Drishyam
இந்த படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அதன்படி 2014 ஆம் ஆண்டில், கன்னடம் மற்றும் தெலுங்கில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. கன்னட பதிப்பில் நவ்யா நாயர் மற்றும் ஆஷா சரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர், தெலுங்கு பதிப்பில் வெங்கடேஷ், மீனா மற்றும் நதியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
Papanasam
இந்த வெற்றியைத் தொடர்ந்து, தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமிழிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் ஹிந்திலும் த்ரிஷ்யம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
Drishyam
இந்தியாவில் ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படம் 2017 இல் இலங்கையில் ரீமேக் செய்யப்பட்டது. சிங்கள மொழியில் தர்ம யுத்தம் என்று பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படம் பரவலான பாராட்டைப் பெற்றது.
Drishyam
இந்தியத் துணைக்கண்டத்தில் நின்றுவிடாமல் சீனாவிலும் ரீமேக் செய்யப்பட்டது.,Sheep Without a Shepherd, என்ற பெயரில் 2019 இல் வெளியானது. இந்தோனேஷியன், கொரியன் ஆகிய மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
Drishyam
இதனிடையே மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. கோவிட் தொற்று காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் இந்த படம் 2021-ம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
Drishyam
இந்தப் படம் கன்னடத்தில் பி. வாசு இயக்கத்தில் த்ரிஷ்யா 2 என்றும், தெலுங்கில் த்ருஷ்யம் 2 (2021) என்றும் ரீமேக் செய்யப்பட்டது. அபிஷேக் பதக் இயக்கிய த்ரிஷ்யம் 2 என்ற இந்தி ரீமேக் 18 நவம்பர் 2022 அன்று திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.