MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Simbu Treat : பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு டபுள் டிரீட் கொடுக்க உள்ள சிம்பு.... ரெண்டுமே வேறலெவல் அப்டேட் ஆச்சே

Simbu Treat : பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு டபுள் டிரீட் கொடுக்க உள்ள சிம்பு.... ரெண்டுமே வேறலெவல் அப்டேட் ஆச்சே

வருகிற பிப்ரவரி 3-ந் தேதி பிறந்தநாள் காண உள்ள சிம்பு, அன்றைய தினம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக டபுள் டிரீட் கொடுக்க உள்ளாராம். 

1 Min read
Author : Ganesh A
Published : Jan 27 2022, 10:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, தன் தந்தையைப் போலவே தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்காமல் தவித்து வந்த சிம்புவுக்கு சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுத்தந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் மாபெரும் வெற்றியை ருசித்துள்ள சிம்புவுக்கு, தற்போது கோலிவுட்டில் மார்க்கெட் அதிகரித்துள்ளது. மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள சிம்பு, தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வருகிறார்.

35

இதில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர் நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். 

45

இதையடுத்து ‘பத்து தல’ படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. இப்படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் ஒபிலி என் கிருஷ்ணா இயக்க உள்ளார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.

55

இந்நிலையில், வருகிற பிப்ரவரி 3-ந் தேதி பிறந்தநாள் காண உள்ள சிம்பு, அன்றைய தினம் ரசிகர்களுக்கு டபுள் டிரீட் கொடுக்க உள்ளாராம். அதன்படி வெந்து தணிந்தது காடு படத்தின் சிங்கிள் டிராக் அன்று வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் பத்து தல படத்தின் முக்கிய அப்டேட்டும் அன்று வெளியாக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிலம்பரசன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Thriller Movies : குலை நடுங்க வைக்கும் 5 திரில்லர் படங்கள்! கிளைமாக்ஸ் வரை விலகாத மர்மம்!
Recommended image2
The Paradise: ட்ரோலுக்கு மத்தியில் 'தி பாரடைஸ்' வசூல் வேட்டை.. மாஸ் காட்டும் நானி.. கலெக்ஷன் எவ்வளவு?
Recommended image3
Suriya : முட்டாள்களுக்கு பதில் சொல்லாதீங்க... ரசிகர்களுக்கு சூர்யா சொன்ன அட்வைஸால் வெடித்த சர்ச்சை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved