MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அட்லீக்கு நோ சொல்லிவிட்டு.. அவரின் உதவி இயக்குனருக்கு ஓகே சொன்ன ரஜினி- சூப்பர்ஸ்டாரின் அடுத்தபட டைரக்டர் இவரா?

அட்லீக்கு நோ சொல்லிவிட்டு.. அவரின் உதவி இயக்குனருக்கு ஓகே சொன்ன ரஜினி- சூப்பர்ஸ்டாரின் அடுத்தபட டைரக்டர் இவரா?

Thalaivar 170 : நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் தற்போது நடித்து வரும் ரஜினி, அடுத்ததாக எந்த இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Aug 27 2022, 10:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படம் ஜெயிலர். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வஸந்த் ரவி, யோகிபாபு, விநாயகன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இதனிடையே நடிகர் ரஜினியின் 170-வது படத்தை இயக்கப்போகும் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த லிஸ்டில் இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி, அட்லீ ஆகியோர் இருந்தனர். இவர்களில் யாராவது ஒருவருக்கு தான் அந்த வாய்ப்பு போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வேறு ஒரு இயக்குனருக்கு அந்த வாய்ப்பு சென்றிருக்கிறது.

இதையும் படியுங்கள்... விக்ரமுக்கு கூட கம்மி தான்... பொன்னியின் செல்வனில் நடிக்க அதிக சம்பளம் வாங்கியது எந்த நடிகர் தெரியுமா?

34

அது இளம் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி தான். இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான டான் படத்தை இயக்கியவர் ஆவார். டான் படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார், அப்படம் மிகவும் பிடித்துப் போனதால் சிபியை அழைத்து கதை கேட்டாராம். அவர் சொன்ன கதையும் பிடித்துப் போனதால் தனது அடுத்த பட வாய்ப்பை வழங்கி உள்ளாராம் ரஜினி.

44

சிபி சக்ரவர்த்தி இயக்கிய முதல் படமான டான் படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தான் ரஜினியின் 170-வது படத்தையும் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சிபி சக்ரவர்த்தி இயக்குனர் அட்லீயிடம் மெர்சல், தெறி போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். ஜெயிலர் படத்தை முடித்த பின்னர் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்ல எனக்கு நேர்ந்த அவமானம்... கலங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அட்லீ
ரஜினிகாந்த்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lenin Pandiyan Review : சிவாஜி பேரன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? லெனின் பாண்டியன் விமர்சனம்
Recommended image2
Dorothy Movie First Review : டோரதி முதல் விமர்சனம் வந்தாச்சு... படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா?
Recommended image3
Divya Sathyaraj : பயில்வான் ரங்கநாதன் எதிராக திவ்யா சத்யராஜ் தொடர்ந்த ரூ.1 கோடி மானநஷ்ட வழக்கு... அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved