- Home
- Cinema
- கீர்த்தியும் இல்ல... கியாராவும் இல்ல... 500 கோடி பட்ஜெட் படத்தை அசால்டாக தட்டித்தூக்கிய பிரபல நடிகை...!
கீர்த்தியும் இல்ல... கியாராவும் இல்ல... 500 கோடி பட்ஜெட் படத்தை அசால்டாக தட்டித்தூக்கிய பிரபல நடிகை...!
ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த பிரம்மாண்ட படத்தின் ஹீரோயின் வாய்ப்பை வேறொரு முன்னணி நடிகை தட்டித்தூக்கியுள்ளார்.

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபாஸ், பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார்.

அடுத்து மீண்டும் இந்தியாவை திரும்பி பார்க்க வைக்க திட்டம் போட்டுள்ள பிரபாஸ், தன்ஹாஜி பட இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

3டி தொழில்நுட்பத்தில் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாக உள்ள இந்த திரைப்படம், தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது.

இந்த படத்திற்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை மேற்கொள்ள அவதார் மற்றும் ஸ்டார் வார்ஸ் போன்ற பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு பணியாற்றிய WETA நிறுவனத்தின் VFX தொழில்நுட்ப கலைஞர்களை களமிறக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராமயணத்தின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தில் பிரபாஸ் ராமராக நடிக்க உள்ளார்.

சைஃப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த படத்தில் அடுத்த முக்கிய கதாபாத்திரமான சீதையாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக அளவில் இருந்தது. இந்நிலையில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது வாங்கிய கீர்த்தி சுரேஷை இந்த படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டது.

அதன் பின்னர் பாலிவுட் நடிகையான கியாரா அத்வானியிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் தீயாய் பரவின. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த பிரம்மாண்ட படத்தின் ஹீரோயின் வாய்ப்பை வேறொரு முன்னணி நடிகை தட்டித்தூக்கியுள்ளார்.

ஆம்.. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சனோன் தான் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடிக்க உள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்து ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டதாக கூறப்படும் நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.