MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 68 வயதில் 7-ம் வகுப்பு தேர்வு எழுதிய சூர்யா பட தேசிய விருது நடிகர் யார் தெரியுமா?

68 வயதில் 7-ம் வகுப்பு தேர்வு எழுதிய சூர்யா பட தேசிய விருது நடிகர் யார் தெரியுமா?

National Award winning actor: பிரபல தேசிய விருது நடிகர் இந்திரன்ஸ் தன்னுடைய 68 வயதில், 7-ஆம் வகுப்பு தேர்வு எழுதியதாகவும்... அதன் பின்னணியில் உள்ள காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 28 2026, 03:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
இந்திரன்ஸ்:
Image Credit : stockPhoto

இந்திரன்ஸ்:

நாடகத் துறையிலும், மலையாள திரையுலகிலும் பிரபலமானவர் நடிகர் இந்திரன்ஸ். இவர் “வயது என்றுமே, படிப்புக்கு தடையல்ல” என்பதே தன்னுடைய செயலால் நிகழ்த்தி காட்டியுள்ளார். இவரது செயல் தற்போது... கேட்பவர்களை மட்டும் அல்ல, ரசிகர்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

26
தனித்துவமான அடையாளத்தை பதித்தார்:
Image Credit : X

தனித்துவமான அடையாளத்தை பதித்தார்:

நடிகர் இந்திரன்ஸ் , 1981-ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் ஒரு ஒப்பனை கலைஞராக தனது பயணத்தை தொடங்கினார். ஆரம்ப காலங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கி... பின்னர் பல இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்து, முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். நகைச்சுவை மட்டுமல்லாமல், செண்டிமெண்ட் நிறைந்த கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து, திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை பதித்தார்.

36
தேசிய விருதை பெற்றார்:
Image Credit : X

தேசிய விருதை பெற்றார்:

2021-ஆம் ஆண்டு 'ஹோம்' என்கிற மலையாள படத்தில் நடித்ததற்காக இந்திரன்ஸ் சிறந்த துணை நடிகருக்கான, தேசிய விருதை பெற்றார். இதேபோல், ‘கேரளா கிரைம் ஃபைல்ஸ் 2’ வெப் தொடரில் இவரது நடிப்பு பார்வையாளர்களிடமிருந்து பெரும் பாராட்டை பெற்றது. இளம் இயக்குநர்களின் பல படங்களில் முதல் தேர்வாகவும் இந்திரன்ஸ் விளங்கியுள்ளார்.

46
மூன்றாவது பையனாக இந்திரன்ஸ் பிறந்தார்:
Image Credit : X

மூன்றாவது பையனாக இந்திரன்ஸ் பிறந்தார்:

இந்திரன்ஸின் இந்த வாழ்க்கை பயணம் பல போராட்டங்களை கொண்டது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வசதி இல்லாத காரணத்தால் பள்ளிப் படிப்பை சிறுவயதில் முற்றிலும் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 7 பேர். அதில் மூன்றாவது பையனாக இந்திரன்ஸ் பிறந்தார். பெற்றோரின் பொருளாதார குறைபாடுகளால் கல்வியை தொடர முடியாமல் போனது.

56
வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை நிறுத்தினேன்:
Image Credit : X

வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை நிறுத்தினேன்:

இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது, “நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது யுனிஃபார்ம் வாங்குவதற்கு காசில்லை. அதனால் ஒரு ஆண்டுக்கும் பள்ளி செல்லவில்லை. பின்னர் புத்தகங்களை வாங்கவும் சாத்தியமாகவில்லை. பள்ளியில் யுனிஃபார்ம் கட்டாயம். வீட்டில் வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை நிறுத்தினேன்.” என தெரிவித்துள்ளார்.

66
படிப்பிற்கு வயது தடை இல்லை:
Image Credit : Youtube

படிப்பிற்கு வயது தடை இல்லை:

படிப்பு மீது இருந்த ஆவர்வம் குறையாததால், இந்திரன்ஸ் தனது 68 வயதில் 7-ம் வகுப்பு தேர்வு எழுத திட்டமிட்டு, கேரள மாநில எழுத்தறிவு இயக்க ஆணையத்தின் வாயிலாக அந்த வாய்ப்பை பெற்றார். நடிகர் இந்திரன்ஸ், தேர்வை முடித்ததும் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுத திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் 10-ஆம் வகுப்பு எழுதுவதற்கு முன் 7-ம் வகுப்பு தேர்வை முடித்து சான்றிதழ் பெற வேண்டும் என்பதால், முதலில் 7-ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளார்.

இந்திரன்ஸ் எடுத்த இந்த முயற்சி, வயதானவர்களுக்கும், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கும்... படிப்பிற்கு வயது தடை இல்லை என்கிற உத்வேகத்தை கொடுத்துள்ளது. இந்திரன்ஸ் விரைவில் சூர்யா நடிப்பில் - ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ரிலீஸ் ஆக உள்ள, கருப்பு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் நடிகைகள்
தமிழ் சினிமா
சூர்யா
திரைப்படம்
சினிமா
சினிமா காட்சியகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சமந்தா நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் பற்றி தெரியுமா?
Recommended image2
பிரதீப் இல்ல... ஒரே படத்தில் ஹீரோவாகவும், டைரக்டராகவும் ஜெயித்தவர் - யார் இந்த சுட்டிக் குழந்தை?
Recommended image3
மேயாத மான் படத்தில் ஹீரோ - ஹீரோயினாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved